Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலையில் மீண்டும் ஒரு 'இரத்த களரி' ஏற்படுமோ என அச்சம்!

T

The Leader Desk

அக்டோபர் 26, 2021 • 5:42 PM

வெலிக்கடை சிறைச்சாலையில் மீண்டும் ஒரு 'இரத்த களரி' ஏற்படுமோ என அச்சம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி, ஒரு மாத காலத்திற்கும் மேலாக மரண தண்டனையை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இந்த நிலையில், வார இறுதியில் கலகத் தடுப்பு காவல்துறைக்கு மேலதிகமாக சுமார் 200 மேலதிக சிறைக்காவலர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
  • உண்மைகளை விளக்கி, தாக்குதல் எதுவுமின்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.
எழுத்து அளவு:

வெலிக்கடை சிறைச்சாலையின் கூரையின் மீதேறி, ஒரு மாத காலத்திற்கும் மேலாக மரண தண்டனையை இரத்து செய்தல் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், வார இறுதியில் கலகத் தடுப்பு காவல்துறைக்கு மேலதிகமாக சுமார் 200 மேலதிக சிறைக்காவலர்களும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

உண்மைகளை விளக்கி,  தாக்குதல் எதுவுமின்றி போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

எவ்வாறாறெனினும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் தரையிறங்கிய பின்னர் குடிக்க  தண்ணீர் கூட வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டும் சிறைக் கைதிகள் குறித்த ஆர்வலர்கள், அடக்குமுறை தீவிரமடையும் என்ற அச்சத்தில், உள்ளூர் மற்றும் சர்வதேச மனித உரிமை அமைப்புகள் உடனடியாக இந்த விடயத்தில் தலையிடவேண்டுமென அழைப்பு விடுத்துள்ளனர்.

"சிறைக்குள் இருக்கும் கைதிகளிடமிருந்து எமக்குக் கிடைத்த தகவல்களுக்கு அமைய,  வெலிக்கடை சிறைச்சாலையை மீண்டும் இரத்தக் ஆறாக மாற்ற அரசாங்கம் அதிகப்படியான வன்முறையைப் பிரயோகிக்குமா என்ற அச்சம் நிலவுகிறது." என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபைக்கு எழுதியுள்ள கடிதத்தில் கைதிகளின் உரிமைகளைப் பாதுகாக்கும் குழு தெரிவித்துள்ளது.

“இந்தச் சூழலில், கைதிகளின் உயிரைக் காப்பாற்றவும், போராட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் ஆதரவாளர்களுக்கு எதிரான பழிவாங்கலைத் தடுக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.” என அதில் கூறப்பட்டுள்ளது.

”நீண்ட காலமாக, கைதிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் போராட்டங்களை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் வெறும் வாக்குறுதிகளுடன் மட்டுப்படுத்தாமல்,  காலவரையறையுடனான உங்கள் அமைப்புகளின் மேற்பார்வையின் கீழ் வெளிப்படையான திட்டத்தின் மூலம் பிரச்சினைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்” எனவும் அதில் கூறப்பட்டுள்ளது.

கைதிகளின் உரிமைகள் பாதுகாப்புக் குழுவின் தலைவர் சட்டத்தரணி சேனக பெரேராவின் கையொப்பமிடப்பட்ட கடிதத்தில் கடந்த வருடம் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கைதிகள் துப்பாக்கிச் சூடு மற்றும் தாக்குதல் நடத்தப்பட்டு துன்புறுத்தப்பட்ட விடயமும்  சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...