Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு தேசபந்து தொலைபேசியில் அச்சுறுத்தல்!

T

The Leader Desk

அக்டோபர் 25, 2021 • 4:39 PM

மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகேவிற்கு தேசபந்து தொலைபேசியில் அச்சுறுத்தல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மாஅதிபர், தேசபந்து தென்னகோன் தன்னை இவ்வாறு அச்சுறுத்தியதாக அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே வெளிப்படுத்துகிறார்.
  • ‘ஒகஸ்ட் 06ம் திகதி அதிகாலையின் என்னைக் கைது செய்து தலங்கம பொலிஸ{க்கு அழைத்துச் சென்றனர்.
  • அதில் பேசிய தேசபந்து தென்னகோன் ‘இம்முறை உங்களை விடப்போவதில்லை எல்லோருக்கும் ஒரு முடிவு கட்டுவேன், நீங்கள் கூடுதலாக ஆடுகிறீர்கள், கவனமாக இரு” என்று கூறினார்.
எழுத்து அளவு:

மேல் மாகாணத்திற்குப் பொறுப்பான பொலிஸ் மாஅதிபர், தேசபந்து தென்னகோன் தன்னை இவ்வாறு அச்சுறுத்தியதாக அனைத்துப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே வெளிப்படுத்துகிறார்.

கொழுமபு, தடுப்புக் காவல் சிறையிலிருந்து விசேட கடிதமொன்றின் மூலம் கூறுகையில், தன்னை தலங்கம பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்வதற்கு முன்பு மிரிஹானையில் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றதாகவும், பின்னர் தலங்கம பொலிஸ{க்கு அழைத்துச் சென்றதாகவும் கூறியுள்ள அவர், தேசபந்து தென்னகோன் தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை தொலைபேசியில் அழைத்து அழைப்பை வசந்தவிடம் கொடுக்குமாறு கூறியதாகவும் கூறுகிறார். கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன் மிரட்டும் தொணியில் அந்த தொலைபேசி அழைப்பின் மூலம் கீழ்கண்டவாறு தன்னை மிரட்டியதாகவும் கூறியுள்ளார்.

‘ஒகஸ்ட் 06ம் திகதி அதிகாலையின் என்னைக் கைது செய்து தலங்கம பொலிஸ{க்கு அழைத்துச் சென்றனர். அங்கு வாக்குமூலம் வழங்கிக் கொண்டிக்கும் போது தொலைபேசியின் ஊடாக தேசபந்து தென்னகோன் தலங்கம பொலிஸ் நிலைய பொறுப்பதியோடு தொலைபேசியில் பேசினார். பின்னர் தொலைபேசி எனது கைக்கு தரப்பட்டது. அதில் பேசிய தேசபந்து தென்னகோன் ‘இம்முறை உங்களை விடப்போவதில்லை எல்லோருக்கும் ஒரு முடிவு கட்டுவேன், நீங்கள் கூடுதலாக ஆடுகிறீர்கள், கவனமாக இரு” என்று கூறினார். நான் இதனை மிகவும் பொறுப்புடன் கூறுகிறேன். தேசபந்து தென்னகோன் தொலைபேசி ஊடாக அப்படி மிரட்டினார். இதுதான் சிறி லங்கா ஜனநாயக சோஷலிஸ குடியரசின் பொலிஸ். ஆகவே, இந்த கைதுகள் தெளிவாக திட்டமிட்டு செய்த கைதுகள் என்பது உறுதி. இறுதியில், தேசபந்து தென்னகோன் செய்த மிரட்டலின் அர்த்தம் சிறைச்சாலையில் வைத்து தெரிய வந்தது”

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...