Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நடுக்கடலில் உயிரிழந்த தமிழ்நாடு மீனவர் ராஜ்கிரணின் உடல் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

T

The Leader Desk

அக்டோபர் 23, 2021 • 9:42 AM

நடுக்கடலில் உயிரிழந்த தமிழ்நாடு மீனவர் ராஜ்கிரணின் உடல் இந்தியாவிடம் ஒப்படைப்பு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மீனவரின் உடலை வாங்கிய இந்திய கடலோர காவல் படையினர், நடுக்கடலில் வைத்து புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.
  • புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான் மீன்பிடி விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மூவரும் மீன்பிடிக்க சென்றனர்.
  • இந்நிலையில் நடுக்கடலில் படகு மூழ்கியதில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் வரும் 1ஆம் தேதி வரை யாழ்பாணத்தில் உள்ள முகாமில் தங்க வைக்க ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டதால் மாயமான மீனவர் ராஜ்கிரன் உடல் மட்டுமே இன்று தாயகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
  • மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் இரண்டு படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
எழுத்து அளவு:

மீனவரின் உடலை வாங்கிய இந்திய கடலோர காவல் படையினர், நடுக்கடலில் வைத்து புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினத்திலிருந்து கடந்த 18ஆம் தேதி சுரேஷ்குமார் என்பவருக்கு சொந்தமான் மீன்பிடி விசைப்படகில் மீன் பிடிக்க சென்ற ராஜ்கிரண், சுகந்தன், சேவியர் ஆகிய மூவரும் மீன்பிடிக்க சென்றனர்.

அவர்கள் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது எல்லை தாண்டி மீன்பிடித்தாக இலங்கை கடற்படையினர் கைது செய்ய முயன்ற போது கடற்படையினரிடம் இருந்து தப்பிக்க முயன்ற தமிழக மீனவரின் படகு மீது இலங்கை கடற்படை ரோந்துக் கப்பல் மோதியதில் படகு நடுக்கடலில் மூழ்கியது, என்று மீனவர்கள் கூறுகிறார்கள்.

அதில் மாயமான மீனவர் ராஜ்கிரணின் சடலத்தை இரண்டு நாட்கள் தேடுதலுக்கு பின் இலங்கை கடற்படையினர் மீட்டனர்.

இலங்கையில் சடலமாக மீட்கப்பட்ட தமிழக மீனவர் - திருமணமாகி 40 நாட்களே ஆனவர்

மீட்கப்பட்ட உடல் உடற்கூறு ஆய்வுக்கு பின் யாழ்பாணத்தில் உள்ள இந்திய துணைத் தூதராக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, இன்று காலை சுமார் 7 மணியாளவில் காங்கேசன்துறை கடற்படை முகாமில் உள்ள கடற்படை வீரர்களிடம் தூதரக அதிகாரிகளால் ஒப்படைக்கபட்டது.

மீனவர் ராஜ்கிரனின் உடலை இலங்கை கடற்படையினர் சர்வதேச கடல் எல்லையில் வைத்து இன்று காலை சுமார் பத்து மணியளவில் இந்திய கடலோர காவல் படையினரிடம் ஒப்படைத்தனர். ஒப்படைக்கப்பட்ட மீனவர் ராஜ்கிரணின் உடல் நடுக்கடலில் வைத்து புதுக்கோட்டை மாவட்ட மீன்வளத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு கோட்டைப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்துக்கு கொண்டு வரப்பட்டு வருகிறது.

உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண்

உயிரிழந்த மீனவர் ராஜ்கிரண்

துறைமுகம் வரும் உடலுக்கு அரசு அதிகாரிகள் மரியாதை செலுத்திய பின் ராஜ்கிரண் உடல் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படும்.

இந்நிலையில் நடுக்கடலில் படகு மூழ்கியதில் உயிருடன் மீட்கப்பட்ட இரண்டு மீனவர்கள் வரும் 1ஆம் தேதி வரை யாழ்பாணத்தில் உள்ள முகாமில் தங்க வைக்க ஊர்காவல் துறை நீதிமன்றம் உத்தரவிட்டதால் மாயமான மீனவர் ராஜ்கிரன் உடல் மட்டுமே இன்று தாயகம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இலங்கை கடற்படையை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் ஆர்பாட்டம்

கடற்கரையில் கண்ணீருடன் காத்திருக்கும் உறவினர்கள்.

கடற்கரையில் கண்ணீருடன் காத்திருக்கும் உறவினர்கள்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர் நடுக்கடலில் உயிரிழந்ததை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தங்கச்சிமடத்தில் ஆர்பாட்டம் நடத்தினர். மேலும் வெள்ளிகிழமை மாலை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கைது செய்யப்பட்டு இந்திய கடற்படை வசமுள்ள இரண்டு இலங்கை மீனவர்களையும் விடுதலை செய்யவேண்டும் என்று தமிழ்நாடு மீனவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து படுகொலை செய்வதாக இலங்கை அரசு மீது குற்றம்சாட்டியும், இதனை கண்டுகொள்ளாமல் இருந்து வரும் மத்திய, மாநில அரசுகளை வன்மையாக கண்டிப்பதுடன் படுகொலை செய்யப்பட்ட மீனவர் குடும்பத்திற்கு தகுந்த இழப்பீடு வழங்கி அந்த குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்களால் தங்கச்சிமடத்தில் ஆர்பாட்டம் நடத்தப்பட்டது.

கடலில் மீன் பிடிக்கும் மீனவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும், இதுபோன்ற படுகொலை சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மீனவர் பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இந்திய கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட இரண்டு இலங்கை மீனவர்களை இந்திய அரசு உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என மீனவர்கள் ஆர்பாட்டம் வாயிலாக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.

மேலும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட 23 மீனவர்களையும் இரண்டு படகுகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்று ராமேஸ்வரம் மீனவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நடுக்கடலில் உயிரிழந்த தமிழ்நாடு மீனவர் ராஜ்கிரணின் உடல் இந்தியாவிடம் ஒப்படைப்பு! | Tamil Leader | We Lead the Nation