Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

எல்லேவல நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் மரணம்!

T

The Leader Desk

அக்டோபர் 20, 2021 • 5:25 PM

எல்லேவல நீர் வீழ்ச்சியில்  நீராடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் மரணம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புதிய காத்தான்குடி பதுறியா வீதியைச் சேர்ந்த இளம் வர்த்தகரான எம்.சி.நியாஸ் (40) அவரது மகன் எம்.என்.சஹீட் (14), மகள் எம்.என்.சைமா(11) ஆகிய மூவருமே இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என தெரியவருகிறது.
  • கடந்த வெள்ளிக்கிழமையன்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மகளின் சிகிச்சைக்காக குடும்ப சகிதம் வேன் ஒன்றில் வேன் சாரதி அடங்கலாக 9 பேர் சென்றுள்ளனர்.
  • மனைவியும் மற்றய இரண்டு பிள்ளைகளும் கூடச் சென்ற உறவினர்களும் வெளியில் நின்றுள்ளனர்.
எழுத்து அளவு:

புதிய காத்தான்குடி பதுறியா வீதியைச் சேர்ந்த இளம் வர்த்தகரான எம்.சி.நியாஸ் (40) அவரது மகன் எம்.என்.சஹீட் (14), மகள் எம்.என்.சைமா(11) ஆகிய மூவருமே இச் சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் என தெரியவருகிறது.

கடந்த வெள்ளிக்கிழமையன்று கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலை ஒன்றுக்கு மகளின் சிகிச்சைக்காக குடும்ப சகிதம் வேன் ஒன்றில் வேன் சாரதி அடங்கலாக 9 பேர் சென்றுள்ளனர்.

கொழும்பு சென்ற இவர்கள் மொனறாகல வழியாக காத்தான்குடிக்கு வந்து கொண்டிருந்த போது வெல்லவாயவிலுள்ள எல்லேவல வீழ்ச்சிக்கு சென்றுள்ளனர்.

அங்கு தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகளும் நீராடியுள்ளனர். இதில் மகள் நீரில் மூழ்குவதை அவதானித்த தந்தையும் சகோதரனும் மீட்க முற்பட்ட போது அவர்களும் நீரில் மூழ்கியுள்ளனர்.

மனைவியும் மற்றய இரண்டு பிள்ளைகளும் கூடச் சென்ற உறவினர்களும் வெளியில் நின்றுள்ளனர்.

இந்த நிலையில் நீரில் மூழ்கிய தந்தை மற்றும் இரண்டு பிள்ளைகள் அடங்கலாக மூவரையும் அங்கு ஒன்று திரண்ட பொது மக்கள், சடலமாக மீட்டு வெல்லவாய வைத்தியசாலைக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இதனையடுத்து அங்கு சென்ற வெல்லாவய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டதுடன் மூவரின் சடலமும் வெல்லாய வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் காத்தான்குடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுடன் பெரும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதேவேளை, இச்சம்பவத்தையடுத்து சகல வர்த்தகர்களும் தங்களது வர்த்தக நிலையங்களில் வெள்ளைக் கொடிகளைப் பறக்க விட்டு மேற்படி வர்த்தகரின் இழப்புக்கு தமது அனுதாபத்தை தெரிவிக்குமாறு காத்தான்குடி வர்த்தக சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எல்லேவல நீர் வீழ்ச்சியில் நீராடச் சென்ற காத்தான்குடியைச் சேர்ந்த மூவர் மரணம்! | Tamil Leader | We Lead the Nation