Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இரசாயண உரத்தை தடை செய்யும் வர்த்தமானி தவறான அறிவுறுத்தலின் பேரிலேயே வெளியிடப்பட்டது ! பேராசிரியர் உதித் கே ஜயசிங்க

T

The Leader Desk

அக்டோபர் 20, 2021 • 5:17 PM

இரசாயண உரத்தை தடை செய்யும் வர்த்தமானி தவறான அறிவுறுத்தலின் பேரிலேயே வெளியிடப்பட்டது ! பேராசிரியர் உதித் கே ஜயசிங்க

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜனாதிபதி கோத்தாபய ராஜபகஷவோ அல்லது அரசாங்கமோ அல்லது விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரோ இதற்கு பொறுப்பல்ல என்றும், உயர்மட்ட அரசியல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கும்போது சரியான முறையில் செயற்பட்டிருக்க வேண்டுமென்றும் செயலாளர் குறிப்பிடுகிறார்.
  • அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இரசாயண உரத்திற்கான தடையினால் தமது பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாத விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர்.
  • எனவே, விவசாய இரசாயணங்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்து வர்த்தமானி வெளியிடுவதற்குப் பதிலாக உயர் தரத்தைக் கொண்ட சூழல் சார்ப்பு தாவர ஊட்டச்சத்துக்கள் இறக்குமதிக்கு அனுமதியளிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

ஜனாதிபதி கோத்தாபய ராஜபகஷவோ அல்லது அரசாங்கமோ அல்லது விடயத்திற்குப் பொறுப்பான அமைச்சரோ இதற்கு பொறுப்பல்ல என்றும், உயர்மட்ட அரசியல் அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கும்போது சரியான முறையில் செயற்பட்டிருக்க வேண்டுமென்றும் செயலாளர் குறிப்பிடுகிறார்.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை அறிக்கையை தயாரிப்பதில் தானும் பங்கேற்றதாகக் கூறும் செயலாளர், அவர்களுக்கு தேவைப்பட்டதெல்லாம் நச்சு விவசாய இரசாயண உரம் பயன்படுத்தப்படும் கலாச்சாரத்திலிருந்து நச்சுத் தன்மையற்ற தரமான மிக உயர்வான தாவர ஊட்டச்சத்துக்களின் பயன்பாட்டை அறிமுகப்படுத்துவதுதான் எனவும் கூறினார்.

எனவே, விவசாய இரசாயணங்கள் பயன்படுத்தப்படுவதை தடை செய்து வர்த்தமானி வெளியிடுவதற்குப் பதிலாக உயர் தரத்தைக் கொண்ட சூழல் சார்ப்பு தாவர ஊட்டச்சத்துக்கள் இறக்குமதிக்கு அனுமதியளிக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவசர அவசரமாக மேற்கொள்ளப்பட்ட இரசாயண உரத்திற்கான தடையினால் தமது பயிர்ச்செய்கையை மேற்கொள்ள முடியாத விவசாயிகள் அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் இறங்கியுள்ளனர். இந்நிலையில், அரசாங்கமானது தனது தீர்மானத்தை பல்வேறு நபர்களின் மீது சுமத்தி தப்பிக் முயல்வதையும் காணக்கூடியதாக உள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...