Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

எமது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பாரிய போராட்டங்களை நடத்துவோம்! ஜோசப் ஸ்டாலின்

T

The Leader Desk

அக்டோபர் 19, 2021 • 5:32 PM

எமது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பாரிய போராட்டங்களை நடத்துவோம்! ஜோசப் ஸ்டாலின்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் நாளை மறுதினம் முதல் மீளத்திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர்கள் தொடர்ந்தும் 100ஆவது நாளாக இன்றும் இணையவழி ஊடான கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
  • இந்த நிலையில், வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறும், நாளை மறுதினம் பாடசாலைகளுக்குத் திரும்பும் படியும் பொலிஸாரினால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) குற்றம் சுமத்தியுள்ளார்.
  • இந்த பின்னணியிலேயே நாளை மறுதினம் பாடசாலைகளைத் திறப்பதற்கான முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது.
எழுத்து அளவு:

200 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் நாளை மறுதினம் முதல் மீளத்திறக்கப்படவுள்ள நிலையில் ஆசிரியர்கள் தொடர்ந்தும் 100ஆவது நாளாக இன்றும் இணையவழி ஊடான கற்பித்தல் செயற்பாடுகளிலிருந்து விலகி வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த பின்னணியிலேயே நாளை மறுதினம் பாடசாலைகளைத் திறப்பதற்கான முயற்சிகளில்  அரசாங்கம் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையில், வேலைநிறுத்தத்தைக் கைவிடுமாறும், நாளை மறுதினம் பாடசாலைகளுக்குத் திரும்பும் படியும் பொலிஸாரினால் ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களுக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டு வருவதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் (Joseph Stalin) குற்றம் சுமத்தியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,

மேலும் ஆசிரியர்களின் போராட்டங்களை நிறுத்தச் சொல்லியும், அவர்களை பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் திரும்புவதற்கான அழுத்தங்களை மேற்கொள்ளவும் பொலிஸ் நிலையங்களுக்கு மேலிடத்திலிருந்து விசேட கடிதம் அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அனைத்து ஆசிரியர்களுக்கும், அதிபர்களுக்கும் பொலிஸார்  தொலைபேசி ஊடாக பாடசாலைகளுக்கு நாளை மறுதினம் சமூகமளிப்பீர்களா இல்லையா என்று கேட்கின்றனர். 21ஆம் திகதி எவரும் பாடசாலைகளுக்கு சமூகமளிக்கமாட்டார்கள்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

எமது கோரிக்கையை நிறைவேற்றாவிட்டால் பாரிய போராட்டங்களை நடத்துவோம்! ஜோசப் ஸ்டாலின் | Tamil Leader | We Lead the Nation