Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நிமலராஜனை வணங்குகிறோம், சுமந்திரனை நிராகரிக்கிறோம்! கோ.ராஜ்குமார்

T

The Leader Desk

அக்டோபர் 19, 2021 • 9:46 AM

நிமலராஜனை வணங்குகிறோம், சுமந்திரனை நிராகரிக்கிறோம்! கோ.ராஜ்குமார்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 21ஆவது ஆண்டு நினைவு நாள், இன்று (19), தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டப் பந்தலில் அஞ்சலி செலுத்திவிட்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.
  • அவர் ஒரு வழக்கைத் தாக்கல் செய்யத் தவறினால், சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு சொன்ன ஊழல் குற்றச்சாட்டை சுமந்திரன் ஏற்றுக்கொள்கிறார் என்றே அர்த்தம்' என்றார்.
  • அங்கு தொடர்ந்துரைத்த அவர், நிமலராஜனை வணங்குகிறோம், சுமந்திரனை நிராகரிக்கிறோம் எனவும் நிமலராஜன் படுகொலை, தமிழ் ஜனநாயகத்தை கொன்றது எனவும் கூறினார்.
எழுத்து அளவு:

படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் நிமலராஜனின் 21ஆவது ஆண்டு நினைவு நாள், இன்று (19), தொடர் போராட்டம் மேற்கொள்ளப்பட்டு வரும் போராட்டப் பந்தலில் அஞ்சலி செலுத்திவிட்டு, ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்துரைத்த அவர், நிமலராஜனை வணங்குகிறோம், சுமந்திரனை நிராகரிக்கிறோம் எனவும் நிமலராஜன் படுகொலை, தமிழ் ஜனநாயகத்தை கொன்றது எனவும் கூறினார்.

இலங்கை ஜனநாயகம் என்பது சிங்களவரின் ஜனநாயகம், அது தமிழர்களை ஒடுக்குவதற்கு மாத்திரமே எனத் தெரிவித்த அவர், தமிழர்களின் ஜனநாயகம் என்பது, பாதுகாப்பான, பாதுகாக்கப்பட்ட தமிழர் தாயகம் வரும் போது தான் தமிழர் ஜனநாயகத்துக்கு உயிர் வரும் எனவும் கூறினார்.

நிமலராஜன் உயிருடன் இருந்திருந்தால், சுமந்திரனின் சதி முடிச்சுக்களை தனது பலம் வாய்ந்த எழுத்துகளால் அவிழ்த்து அம்பலப்படுத்திருப்பார் எனத் தெரிவித்த அவர், ஊழல் செய்யப்பட்ட தமிழ் எம்.பி.க்கள் பதவியில்  இருக்கும் வரை, தமிழர்கள் தங்கள் அரசியல் தீர்வைப் பெற முடியாது எனவும் கூறினார்.

பணம் பெறும் பெரும்பாலான தமிழ் எம்.பிக்கள் ஊமையாக இருப்பது, இது ஒட்டுமொத்த தமிழ் தலைமுறையும் சிங்களவர்களின் அடிமைகளாக மாற்றும் எனவும், அவர் சாடினார்.

'சுமந்திரன் தனது ஊழல் நடவடிக்கைகளை கேட்டபோது அனைவரையும் அச்சுறுத்தினார், ஆனால், சுமந்திரன் சிவாஜிலிங்கம் மீது அவதூறு வழக்கு தொடர மறுக்கிறார். அவர் ஒரு வழக்கைத் தாக்கல் செய்யத் தவறினால், சிவாஜிலிங்கம் ஊடகங்களுக்கு சொன்ன ஊழல் குற்றச்சாட்டை சுமந்திரன் ஏற்றுக்கொள்கிறார் என்றே அர்த்தம்' என்றார்.

அத்துடன், தமிழ்நாடு தமிழர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் எந்தவோர் ஆர்ப்பாட்டத்தையும் தாங்கள் எதிர்ப்பதாகத் தெரிவித்த அவர், ஈழத்துக்கும் தமிழகத்துக்கும் இடையிலான பிணைப்பை முறிப்பதற்கு சுமந்திரனின் சதி இது எனவும் கூறினார்.

'நாங்கள் தெற்கே  மீன்பிடிக்க செல்லாததால், முதலில் சிங்கள மீனவர்கள் எங்கள் பகுதியில் மீன்பிடிப்பதையே எதிர்க்கிறோம். பாதுகாப்பான, தமிழர் தாயகம்   கிடைத்தவுடன், தமிழக மீனவர்களுடன் நாங்கள் சுமுகமான தீர்வுக்கு வருவோம்.

'நமது வடக்கு மற்றும் கிழக்கை ஒட்டுமொத்தமாக தமிழ்நாடு கடல் கடற்கரையுடன் எங்கள் பொதுவான மீன்பிடி பகுதியாக கூட இருக்கலாம். ஈழத் தமிழர்களையும் தமிழ்நாட்டுத் தமிழர் ஒற்றுமையையும் அழிக்க சுமந்திரன் கொழும்பு சிங்களவர்களை சமாதானப்படுத்த கடலில் படகை ஓட்டினார்.

'தமிழர்களின் விடுதலைக்கான கொள்கையில்  சுமந்திரன்  இல்லை என்பதில் தமிழர்கள் கவனமாக இருக்க வேண்டும்' என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...