Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நீதிமன்றத்திற்கு நாங்கள் வந்து காத்திருந்தும் இரகசியமாக வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது!

T

The Leader Desk

அக்டோபர் 18, 2021 • 5:33 PM

நீதிமன்றத்திற்கு நாங்கள் வந்து காத்திருந்தும் இரகசியமாக வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • குறித்த படுகொலை வழக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ரிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
  • பணம் பதவியை வைத்துக் கொண்டு மண் உரிமத்துக்கு பணத்தை வாங்கிவிட்டு எனது மகனுடன் கதைப்பதாக கூறி அடித்து கொலை செய்து விட்டு எங்களையும் இப்படி சித்திரவதை செய்கின்றனர். எனது மகனை திருப்பி என்னிடம் தருவார்களா?
  • இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தாயார் தொடர்ந்தும் தெரிவிக்கையில், “கடந்த வாரம் ஏறாவூர் பொலிஸார் தங்களது வீட்டுக்கு வந்து இன்றைய தினம் வழக்கு விசாரணை உள்ளது, நீதிமன்றத்திற்கு வரும்படி தெரிவித்தனர்.
எழுத்து அளவு:

குறித்த படுகொலை வழக்கு இன்று மட்டக்களப்பு மாவட்ட நீதிவான் நீதிமன்ற பதில் நீதிபதி ரிஸ்வான் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இந்த சம்பவம் தொடர்பாக உயிரிழந்த பாலசுந்தரத்தின் தாயார் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,

“கடந்த வாரம் ஏறாவூர் பொலிஸார் தங்களது வீட்டுக்கு வந்து இன்றைய தினம் வழக்கு விசாரணை உள்ளது, நீதிமன்றத்திற்கு வரும்படி தெரிவித்தனர். எனினும் இன்றையதினம் நீதிமன்றத்திற்கு நாங்கள் வந்து காத்திருந்தும் இரகசியமாக வழக்கு விசாரணை நடைபெற்றுள்ளது.

காலை எட்டு மணி தொடக்கம் ஒரு மணி வரைக்கும் எங்களை வெளியில் நிற்கவைத்து விட்டு இறுதியாக நாங்கள் நீதிமன்றத்திற்குள் உள்நுழையும் போது எமது மகன் தொடர்பான வழக்கு நடந்து முடிந்ததாக தெரிவித்தனர்.

பணம் பதவியை வைத்துக் கொண்டு மண் உரிமத்துக்கு பணத்தை வாங்கிவிட்டு எனது மகனுடன் கதைப்பதாக கூறி அடித்து கொலை செய்து விட்டு எங்களையும் இப்படி சித்திரவதை செய்கின்றனர்.  எனது மகனை திருப்பி என்னிடம் தருவார்களா? எனது மகன் கொலை  செய்யப்பட்ட போது பலர் இராஜாங்க அமைச்சர் வீட்டில் இருந்துள்ளனர்.  யாருமே எமக்கு சாட்சி சொல்ல முன்வருகிறார்கள் இல்லை.

நீதிபதி எமக்கு நல்ல தீர்வை பெற்று தர வேண்டும்.  கௌரவ நீதிபதி குறித்த வழக்கை சிஐடிக்கு மாற்றக் கோரியும் மட்டக்களப்பு பொலிஸாரால் குறித்த வழக்கினை இதுவரை கொடுக்கவில்லை. மீண்டும் இந்த வழக்கு நவம்பர் மாதம் முதலாம் திகதி அழைக்கப்படவுள்ளது” என குறிப்பிட்டுள்ளார்.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...