Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் மீனவர்கள் தாக்கப்படலாம்! த ஹிந்து

T

The Leader Desk

அக்டோபர் 18, 2021 • 10:46 AM

இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் மீனவர்கள் தாக்கப்படலாம்! த ஹிந்து 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கச்சத்தீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், கடலோர மாவட்ட மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • இலங்கை வசமுள்ள கச்சத்தீவை இந்திய மீனவர்களின் நலன் கருதி மீளவும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
  • இலங்கை கடலில் இடம்பெறுகின்ற இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து இலங்கை கடல் வளத்தை பாதுகாக்குமாறு கோரி நேற்று (17) கடல் வழி கண்டனப் போராட்ட​ம் நடத்தப்பட்டது.
எழுத்து அளவு:

கச்சத்தீவு பகுதியில் மீன்பிடியில் ஈடுபடுவது தொடர்பில் இரு நாட்டு மீனவர்களுக்கும் இடையில் முரண்பாடுகள் காணப்படுகின்ற நிலையில், கடலோர மாவட்ட மீனவர்களுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா மற்றும் இலங்கை மீனவர்கள் கச்சத்தீவு கடற்பிராந்தியத்தில், மீன் பிடிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் அனுமதிக்க வேண்டும் என கோரி இராமேஷ்வரம் மீனவர்கள் கடந்த ஒரு வாரமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்துடன் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட மீனவர்களின் படகுகளுக்கான நஷ்டஈட்டை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையிலேயே, சர்வதேச கடல் எல்லை ஊடாக இலங்கை கடற்பரப்பிற்குள் பிரவேசிக்கும் பட்சத்தில் இந்திய மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படலாமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக ‘த ஹிந்து’ செய்தி வௌியிட்டுள்ளது.

இலங்கை வசமுள்ள கச்சத்தீவை இந்திய மீனவர்களின் நலன் கருதி மீளவும் இந்தியா பொறுப்பேற்க வேண்டும் என தமிழக அரசியல் கட்சிகள் வலியுறுத்தி வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இலங்கை கடலில் இடம்பெறுகின்ற இந்திய மீனவர்களின் சட்டவிரோத செயற்பாடுகளை தடுத்து இலங்கை கடல் வளத்தை பாதுகாக்குமாறு கோரி நேற்று (17) கடல் வழி கண்டனப் போராட்ட​ம் நடத்தப்பட்டது.

நேற்று காலை முல்லைத்தீவில் ஆரம்பமான இந்த போராட்டம் யாழ். பருத்தித்துறையில் நிறைவுபெற்றது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...