Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

'புகையிரத கடவையை அடைத்து வைத்து மக்களின் வயிற்றில் அடிக்காதே'! மட்டக்களப்பு போராட்டம்

T

The Leader Desk

அக்டோபர் 17, 2021 • 4:44 PM

'புகையிரத கடவையை அடைத்து வைத்து மக்களின் வயிற்றில் அடிக்காதே'! மட்டக்களப்பு போராட்டம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்று காலை குறித்த பிரதேச புகையிரத கடவை பாதையில் ஒன்று கூடியவர்கள் கையில் சுலோகங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • பறங்கியாமடு மீனவர் கிராம மக்கள் தமது போக்குவரத்தினை வழமையான கடற்கரை வீதியினால் புகையிரத பாதையின் குறுக்காக கடந்து மேற்கொண்டு வந்திருந்தனர்.
  • இவ் பாதையானது கடற்கரைக்கு செல்வதற்கு குறுகிய தூரமாக காணப்பட்டதனால் போக்குவரத்திற்கு இலகுவாக காணப்பட்டது.தற்போது 5 கிலோமீற்றர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.
எழுத்து அளவு:

இன்று காலை குறித்த பிரதேச புகையிரத கடவை பாதையில் ஒன்று கூடியவர்கள் கையில் சுலோகங்களை ஏந்தியவாறும் கோஷங்களை எழுப்பியவாறும் தமது எதிர்ப்பினை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

'புகையிரத கடவையை அடைத்து வைத்து மக்களின் வயிற்றில் அடிக்காதே.' 'புகையிரத திணைக்கள அதிகாரிகளே, எமது மீன்பிடி வீதியனை அடைத்து வைக்காமல் திறந்து விடவும்' ' எமது வழமையான பாதையினை திறந்து விடவும்' என்பன போன்ற வாசகங்கள் எழுதிய பதாதைகளை கையில் ஏந்தியிருந்தனர்.

பறங்கியாமடு மீனவர் கிராம மக்கள் தமது போக்குவரத்தினை வழமையான கடற்கரை வீதியினால் புகையிரத பாதையின் குறுக்காக கடந்து மேற்கொண்டு வந்திருந்தனர்.

கிரான்,சந்திவெளி,முறக்கொட்டான்சேனை,மற்றும் அயல் கிராமங்களைச் சேர்ந்தோர்கள், வியாயபாரிகள் என பலரும் தமது கடற்றொழில் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட இவ் வீதியினையே பயன்படுத்தினர்.

இவ் பாதையானது கடற்கரைக்கு செல்வதற்கு குறுகிய தூரமாக காணப்பட்டதனால் போக்குவரத்திற்கு இலகுவாக காணப்பட்டது.தற்போது 5 கிலோமீற்றர் தூரம் சுற்றி செல்லவேண்டிய நிலை தமக்கு ஏற்பட்டுள்ளதாக கவலை தெரிவிக்கின்றனர்.

இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன்,பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் போன்றோர்களிடம் குறித்த விடயம் தொடர்பாக தெரிவித்தபோதிலும் அவர்கள் நேரில் வந்து பார்வையிட்டு தீர்வு பெற்று தருவதாக கூறிச் சென்றனர் இதுவரை எதுவித பதிலும் கிடைக்கவில்லை என்கின்றனர்.எனவே புகையிரத வீதியினை போக்குவரத்திற்கு ஏற்றால் போல் மாற்றி அமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளை பறங்கியாமடு கிராம மக்கள் கேட்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...