Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அன்செல் லங்கா சர்வதேச போராட்ட தினம் இன்று!

T

The Leader Desk

அக்டோபர் 15, 2021 • 4:32 PM

அன்செல் லங்கா சர்வதேச போராட்ட தினம் இன்று!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உலகின் முன்னணி கையுறைகள் உற்பத்தியாளரான அன்செல், தொழிலாளர்கள் மீது எல்லையற்ற பணி சுமையை திணிப்பதற்கு எதிரான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 11 தொழிற்சங்கத் தலைவர்களை பணிநீக்கம் செய்தது.
  • எஸ் கணபதி, கமல் ஜெயதிஸ்ஸ, தசந்த ஜயலத், சந்தன ரோஷான், சாந்த குமார் முதலிகே, ஏ.எல்.எம் நசார், அஜித் பிரியந்த, ஜே.பி.ஜி.
  • அன்செல் லங்காவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தாலும், நிறுவன முகாமையாளர்கள் அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்ததோடு, எட்டு வருடங்களாக எவ்வித தீர்வையும் வழங்கவில்லை.
எழுத்து அளவு:

உலகின் முன்னணி கையுறைகள் உற்பத்தியாளரான அன்செல், தொழிலாளர்கள் மீது எல்லையற்ற பணி சுமையை திணிப்பதற்கு எதிரான வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட 11 தொழிற்சங்கத் தலைவர்களை பணிநீக்கம் செய்தது.

அன்செல் லங்காவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களுக்கு இழப்பீடு வழங்க நீதிமன்றம் பரிந்துரைத்திருந்தாலும், நிறுவன முகாமையாளர்கள் அதனை எதிர்த்து மேன்முறையீடு செய்ததோடு, எட்டு வருடங்களாக எவ்வித தீர்வையும் வழங்கவில்லை.

சங்கத் தலைவர் அதுல கமல், செயலாளர் விபுல களுஆராச்சி, பொருளாளர் கே. எஸ் கணபதி, கமல் ஜெயதிஸ்ஸ, தசந்த ஜயலத், சந்தன ரோஷான், சாந்த குமார் முதலிகே, ஏ.எல்.எம் நசார், அஜித் பிரியந்த, ஜே.பி.ஜி. கே. ஜயவிக்ரம மற்றும் ரோஹித த சில்வா ஆகியோர் பணி நீக்கம் செய்யப்பட்டிருந்தனர்.

அன்செல்லின் தலைமையிடமாக இருக்கும் அவுஸ்திரேலியாவில் உள்ள தொழிற்சங்கங்கள் மற்றும் வெகுஜன அமைப்புகள், நியூசிலாந்து, மலேசியா மற்றும் ஐக்கிய இராச்சியம், இந்த சர்வதேச போராட்ட தினத்தில் அன்செல் லங்கா தொழிலாளர்களுக்கு ஆதரவளிப்பதாக குறிப்பிட்டுள்ளதோடு, அன்செல் லங்கா ஒத்துழைப்பு குழுவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாக தெரிவித்துள்ளது.

பிரித்தானியாவின் மிகப்பெரிய தொழிற்சங்கமான யுனிசன், இன்று ஒரு சிறப்பு இணைய மாநாட்டையும் திட்டமிட்டுள்ளது.

மேலதிகமாக இலங்கை ஆசிரியர் சங்கம், இலங்கை வர்த்தகம், தொழில் மற்றும் பொது ஊழியர் சங்கம், அஞ்சல் ஊழியர் சங்கம், முகாமையாளர் தொழிற்சங்கம், தாபிந்து கூட்டு, ஸ்டாண்ட் அப் ஊழியர் சங்கம், இலங்கை ஆசிரியர்கள் உட்பட இலங்கையில் உள்ள பல தொழிற்சங்கங்கள் அன்செல் லங்கா சர்வதேச போராட்ட தினத்தை முன்னிட்டு தனது ஆதரவை தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...