Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பெண்களை தொடர்ந்தும் ஆபத்தில் தள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது! சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு

T

The Leader Desk

அக்டோபர் 15, 2021 • 4:15 PM

 பெண்களை தொடர்ந்தும் ஆபத்தில் தள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது! சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்நாட்டு பெண்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் போது நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை தளர்த்தும் முயற்சி சம்பந்தமாக, சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் தேசியக் குழு உறுப்பினர் சித்தாரா குலரத்ன நேற்று (14) நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.
  • அவருடைய கருத்துக்களில் சில, “பெண்கள் வெளிநாட்டுப் பணிக்கு செல்லும் போது நிறைவேற்ற வேண்டிய தகுதிகளில், 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் தாய்மார் பூர்த்தி செய்ய வேண்டியண.
  • இந்து முறையாக கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரினால் நிர்ணயிக்கப்படுவதால், அரச நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு பணிக்குச் செல்லும் பெண்களின் பிள்ளைகள் சம்பந்தமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள நேரிடும்.
எழுத்து அளவு:

இந்நாட்டு பெண்கள் வெளிநாட்டுக்குச் செல்லும் போது நிறைவேற்ற வேண்டிய நிபந்தனைகளை தளர்த்தும் முயற்சி சம்பந்தமாக, சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பின் தேசியக் குழு உறுப்பினர் சித்தாரா குலரத்ன நேற்று (14) நேற்று நடைபெற்ற ஊடகச் சந்திப்பின் போது இதனை வெளிச்சத்திற்குக் கொண்டுவந்தார்.

வெளிநாடுகளில் பணியாற்றும் பெண்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் சம்பந்தமாக தீர்வு பெறுவதற்காக தமது இயக்கம் அடிக்கடி நடவடிக்கை எடுத்த போதிலும், அரசாங்கம் இதுவரை எந்த தீர்வையும் முன்வைக்கவில்லையெனவும், புதிய தளர்வுகளினால் பெண்கள் மாத்தி;ரமல்ல, அவர்களது பிள்ளைகள் உட்பட நெருக்கமானவர்களும் பல பிரச்சினைகளுக்கு முகம் கொடுக்க நேரிடுமெனவும் அவர் கூறினார்.

அவருடைய கருத்துக்களில் சில,

“பெண்கள் வெளிநாட்டுப் பணிக்கு செல்லும் போது நிறைவேற்ற வேண்டிய தகுதிகளில், 5 வயதுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருக்கும் தாய்மார் பூர்த்தி செய்ய வேண்டியண. ஏற்கனவே உள்ள நிபந்தனைகளை தளர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது. பொதுவாக, அத்தகைய தாய்மார்கள் தமது பிள்ளைகளின் பொறுப்பை எந்த உறவினரிடம் ஒப்படைப்பது என்பதும், அவர்கள் குழந்தைகளை பாதுகாப்பாக பார்த்துக் கொள்வதற்கு உள்ள திறன் சம்பந்தமாகவும் பரிசீலிக்கப்படும்.

இந்து முறையாக கிராம உத்தியோகத்தர் மற்றும் பிரதேச செயலாளரினால் நிர்ணயிக்கப்படுவதால், அரச நிறுவனங்கள் மூலம் வெளிநாட்டு பணிக்குச் செல்லும் பெண்களின் பிள்ளைகள் சம்பந்தமான பொறுப்பை ஏற்றுக் கொள்ள நேரிடும். ஆனால், வெளிநாட்டு பணிக்குச் செல்லும் பெண்களுக்கான விண்ணப்பங்களை புதிய தளர்வுகள் காரணமாக வெளிநாட்டு வேலை வாய்ப்புப் பணியகத்தினால்ள ஒன்லைன் மூலம் ஏற்றுக் கொள்ளப்படும். இதன்போது, பிள்ளைகள் தொடர்பிலான அரசாங்கத்தின் பொறுப்பு சம்பந்தமான நிபந்தனைகள் நீக்கப்பட்டு சத்தியப் பிரமாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் வெளிநாட்டுப் பணிக்கு செல்லும் பெண்களின் பிள்ளைகள் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்த பல்வேறு நிபந்தனைகளுடன் வெளிநாட்டுப் பணிக்குச் சென்ற பெண்களின் பிள்ளைகள் கூட ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளமையால், இந்த குறைந்தபட்ச நிபந்தனையையும் இல்லாமலாக்கினால் நிலை எப்படி இருக்கும் என்பதை எம்மால் உணர முடியும்’’

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

பெண்களை தொடர்ந்தும் ஆபத்தில் தள்ள அரசாங்கம் தயாராகி வருகிறது! சுதந்திரத்திற்கான பெண்கள் அமைப்பு | Tamil Leader | We Lead the Nation