Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ரிஷார்ட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்!

T

The Leader Desk

அக்டோபர் 14, 2021 • 4:01 PM

ரிஷார்ட் பதியுதீன் பிணையில் விடுவிக்கப்பட்டார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இருவேறு வழக்குகளில் தனித்தனியாக அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.
  • ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பிலான வழக்கில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று உத்தரவிட்டார்.
  • இதனைத் தொடர்ந்து பிரதிவாதி தரப்பினால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டார்.
  • இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இருவேறு வழக்குகளில் தனித்தனியாக அவருக்கு இன்று பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஹிஷாலினியின் உயிரிழப்பு தொடர்பிலான வழக்கில் 10 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவரை விடுதலை செய்வதற்கு கொழும்பு மேலதிக நீதவான் ரஜீந்திர ஜயசூரிய இன்று உத்தரவிட்டார்.

இந்த வழக்கில் அவர் ஐந்தாவது பிரதிவாதியாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ளார்.

எவ்வாறாயினும், ரிஷாட் பதியுதீன் வௌிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்கு மேலதிக நீதவான் தடை விதித்துள்ளார்.

இந்த வழக்கு தொடர்பிலான அனைத்து விசாரணைகளும் நிறைவடைந்துள்ளதாக, சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகிய அரச சிரேஷ்ட சட்டத்தரணி ஹங்ச அபேரத்ன மன்றில் இன்று தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து பிரதிவாதி தரப்பினால் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கையை பரிசீலித்த மேலதிக நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான வழக்கிலும் அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது. பயங்கரவாத தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்த வழக்கில் 50 இலட்சம் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் அவர் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

இந்த வழக்கு தொடர்பில், இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகுமாறு ரிஷாட் பதியுதீனுக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்று பிரதிவாதி தரப்பினர் முன்வைத்த பிணைக் கோரிக்கைக்கு பிரதி சொலிசிட்டர் ஜெனரல் மாதவ தென்னகோன் எதிர்ப்பு தெரிவிக்காததால், நீதவான் பிணை வழங்கி உத்தரவிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...