Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அரச பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான பசில் ராஜபக்ஸ, திருக்குமார் நடேசனுக்கு எதிராக வழக்கு விசாரணை!

T

The Leader Desk

அக்டோபர் 14, 2021 • 2:52 PM

அரச பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான பசில் ராஜபக்ஸ, திருக்குமார் நடேசனுக்கு எதிராக வழக்கு விசாரணை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • மல்வானை – மாபிட்டிகமவில் 16 ஏக்கர் காணியில் நீச்சல் தடாகத்துடனான வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு, விலங்குப் பண்ணை நடத்திச் செல்ல அரச பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
  • தாம் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு வழங்கிய வாக்குமூலம் பொய்யானது என சாட்சியாளர் இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.
  • நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் வர்த்தகரான திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக மூன்று குற்றப்பத்திரங்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
எழுத்து அளவு:

மல்வானை – மாபிட்டிகமவில் 16 ஏக்கர் காணியில் நீச்சல் தடாகத்துடனான வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு, விலங்குப் பண்ணை நடத்திச் செல்ல அரச பணம் முறையற்ற விதத்தில் பயன்படுத்தப்பட்ட குற்றச்சாட்டு தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

நிதி தூய்தாக்கல் சட்டத்தின் கீழ் சட்டமா அதிபரால் அமைச்சர் பசில் ராஜபக்ஸ மற்றும் வர்த்தகரான திருக்குமார் நடேசன் ஆகியோருக்கு எதிராக மூன்று குற்றப்பத்திரங்களின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, மேல் நீதிமன்ற நீதிபதி நிமல் ரணவீர முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

பட்டய கட்டடக் கலைஞர் முதித உபாலி ஜயக்கொடியிடம் இன்று குறுக்கு விசாரணை நடத்தப்பட்டது.

தாம் நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவிற்கு வழங்கிய வாக்குமூலம் பொய்யானது என சாட்சியாளர் இன்று ஒப்புக்கொண்டுள்ளார்.

அத்துடன், நிதி குற்றவியல் விசாரணைப் பிரிவின் அதிகாரிகள் குழு, தமது அலுவலகம் மற்றும் வீட்டை சோதனைக்கு உட்படுத்தி ஆவணங்கள் சிலவற்றில் கையொப்பம் பெற்றுக்கொண்டதாகவும் சாட்சியாளர் கூறியுள்ளார்.

சான்றுப்பொருட்களாக பெயரிடப்பட்டுள்ள ஆவணங்களிலுள்ள கையொப்பம் தம்முடையதாக இருப்பதற்கும், தம்முடையதாக இல்லாமல் இருப்பதற்கும் இடமுள்ளதாக சாட்சியாளர் சந்தேகம் தெரிவித்துள்ளார்.

வழக்கு விசாரணை நவம்பர் மாதம் முதலாம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...