Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

சாட்சிகள் இல்லாத போதிலும் கோஷிலா ஹன்ஸமாலிக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது!

T

The Leader Desk

அக்டோபர் 13, 2021 • 5:55 PM

சாட்சிகள் இல்லாத போதிலும் கோஷிலா ஹன்ஸமாலிக்கு பிணை மறுக்கப்பட்டுள்ளது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கோஷிலா ஹன்ஸமாலி மீது எவ்விதக் குற்றமும் இல்லை என்பதுடன், சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் கூட குறித்த இடத்தில் அவர் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை.
  • என்றாலும், அவருக்காக தோற்றிய சட்டத்தரணிகள் விடுத்த பிணை கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.
  • கடந்த வழக்கு விசாரணையின் போது தலங்கம பொலிஸினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகளின் தொகுக்கப்பட்ட அறிக்கையிலும் கோஷிலா ஹன்ஸமாலியின் பெயர் குறிப்படவில்லை.
எழுத்து அளவு:

தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள கோஷிலா ஹன்ஸமாலி மீது எவ்விதக் குற்றமும் இல்லை என்பதுடன், சமர்ப்பிக்கப்பட்ட வீடியோ காட்சிகளில் கூட குறித்த இடத்தில் அவர் இருந்ததற்கான எந்த சான்றுகளும் இல்லை. கடந்த வழக்கு விசாரணையின் போது தலங்கம பொலிஸினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சாட்சிகளின் தொகுக்கப்பட்ட அறிக்கையிலும் கோஷிலா ஹன்ஸமாலியின் பெயர் குறிப்படவில்லை.

இது குறித்து சட்டத்தரணிகள் வினவியபோது, நேற்று தலங்கம பொலிஸ் குறித்த இடத்தில் கோஷிலா ஹன்ஸமாலி இருக்கவில்லை என்பதற்கான அறிக்கையொன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளனர். என்றாலும், அவருக்காக தோற்றிய சட்டத்தரணிகள் விடுத்த பிணை கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.

கொத்தலாவல சட்டமூலத்திற்கு எதிரான “இலவசக் கல்விக்கான மாணவர் மக்கள் இயக்கம்” ஒகஸ்ட் 03ம் திகதி பாராளுமன்றத்தின் முன்பாக நடத்திய ஆர்ப்பாட்டத்தின்போது, பொலிஸார் போட்டிருந்த இரும்பு தடைகளை சேதப்படுத்தியமை, காட்போட் வடிவத்திலான சவப் பெட்டியொன்றை எரித்து பாதையை சேதப்படுத்தியமை சம்பந்தமாக குற்றம் சுமத்தி கோஷிலா ஹன்ஸமாலி உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர். இவர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில், இது சம்பந்தமான வழக்கு நேற்று கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது. அதன்போது, இந்த செயற்பாட்டாளர்களுக்கு எதிராக பொய்க் குற்றம் சுமத்தப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் முக்கிய காரணிகளை முன்வைத்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...