Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தேர்தலில் தோற்ற எஸ்.பி.திசாநாயக ஆசிரியர் போராட்டத்தை நிறுத்த தனக்குத் தெரியும் என்கிறார்!

T

The Leader Desk

அக்டோபர் 13, 2021 • 5:21 PM

தேர்தலில் தோற்ற எஸ்.பி.திசாநாயக ஆசிரியர் போராட்டத்தை நிறுத்த தனக்குத் தெரியும் என்கிறார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஹங்குரங்கத்தவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஆசிரியர் அதிபர்கள் சம்பளப் பிரச்சினை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்படி கூறியுள்ளார்.
  • ஜே.ஆர்.ஜயவர்தன செய்துள்ளார்.
  • “ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை தீர்ப்பது குறித்து எனக்குத் தெரியும்.
எழுத்து அளவு:

தானும் பொறுப்புக் கூற வேண்டியிருந்த விடயம் என்ற வகையில் 24 வருடங்களாக தீர்வு வழங்க முடியாத பிரச்சினையை தீர்த்துவைக்க தனக்குத் தெரியுமெனக் கூறும் முன்னால் கல்வி அமைச்சர்களில் ஒருவரும், மத்திய மாகாண மக்களால் தோற்கடிக்கப்பட்டு தேசியப் பட்டியல் உறுப்பினராக இருப்பவருமான பா.உறுப்பினரே இவ்வாறு பிதற்றியுள்ளார். ஹங்குரங்கத்தவில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றின் பின்னர் ஆசிரியர் அதிபர்கள் சம்பளப் பிரச்சினை சம்பந்தமாக ஊடகவியலாளர்கள் வினவியபோதே அவர் மேற்படி கூறியுள்ளார்.

“ஆசிரியர்களின் வேலை நிறுத்தத்தை தீர்ப்பது குறித்து எனக்குத் தெரியும். ஆனால் ஜனாதிபதியும், பிரதமரும் இதற்கு அமைதியான தீர்வொன்றையே விரும்புவதாக நான் நினைக்கிறேன். அல்லது அந்த வேலை நிறுத்தத்தை அடக்கிவிட்டு நாங்கள் பாடசாலைகளைத் திறப்போம். கடந்த காலங்களிலும் இப்படி செய்துள்ளோம். ஜே.ஆர்.ஜயவர்தன செய்துள்ளார். சிறிமாவோ பண்டாரநாயக செய்துள்ளார். உலகின் செல்வந்த நாடுகளில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களுக்கு இடமளித்திருந்தால் அவை எம்மைப் போன்று வறிய நாடுகளாகியிருக்கும். எதிர்ப்புகளை அடக்குமுறை செய்ததால்தான் அவை செல்வந்த நாடுகளாக உள்ளன”.

தான் செய்தவை மற்றும் கூறியவைகளுக்காக சிறைத் தண்டனை விதிக்கப்பட்டதோடு, மக்கள் வாக்களிக்காமையால் தேர்தலில் தோற்ற இவர் இவ்வாறு ஆசிரியர்கள் அதிபர்களுக்கு மறைமுக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...