Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஈராக் நாடாளுமன்ற தேர்தலில் ஷியா முஸ்லிம் அமைப்பு முன்னிலை!

T

The Leader Desk

அக்டோபர் 12, 2021 • 6:06 PM

ஈராக் நாடாளுமன்ற தேர்தலில் ஷியா முஸ்லிம் அமைப்பு முன்னிலை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஈராக்கில் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் இரானின் தலையீடு இருப்பதை நிறுத்த விரும்பும் அல்-சதர் வெளிநாட்டு தலையீடுகள் எதுவும் இல்லாத புதிய அரசு அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.
  • மொத்தமுள்ள 329 நாடாளுமன்ற இடங்களில் அல்-சதரின் சேரோன் இயக்கம் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
  • சுன்னி இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த முகமது அல்-கல்போசியின் 'தக்கதூம்' கூட்டணி இதுவரை 38 இடங்களில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது.
  • ஈரானுக்கு ஆதரவான பஃடா கூட்டணி வெறும் 14 இடங்கள் மட்டுமே வென்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.
எழுத்து அளவு:

ஈராக்கில் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்கா மற்றும் இரானின் தலையீடு இருப்பதை நிறுத்த விரும்பும் அல்-சதர் வெளிநாட்டு தலையீடுகள் எதுவும் இல்லாத புதிய அரசு அமைக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார்.

நாடாளுமன்ற தேர்தலின் முடிவுகள் பகுதியளவு வெளியாகியுள்ளன.

மொத்தமுள்ள 329 நாடாளுமன்ற இடங்களில் அல்-சதரின் சேரோன் இயக்கம் 73 இடங்களில் வெற்றி பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

சுன்னி இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த முகமது அல்-கல்போசியின் 'தக்கதூம்' கூட்டணி இதுவரை 38 இடங்களில் வென்று இரண்டாம் இடத்தில் உள்ளது.

ஈரானுக்கு ஆதரவான பஃடா கூட்டணி வெறும் 14 இடங்கள் மட்டுமே வென்று பின்னடைவைச் சந்தித்துள்ளது.

அல்-சதர் தலைமையிலான கூட்டணி பிற கட்சிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு ஆட்சியமைப்பதற்கு இன்னும் சில வார காலம் ஆகலாம். அவர் இந்தத் தேர்தலில் போட்டியிடவில்லை என்பதால் அல்-சதர் புதிய அரசுக்குத் தலைமை ஏற்க முடியாது.

நம்பிக்கை இழந்த மக்கள்

திங்கள் இரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அல்-சதரின் ஷியா முஸ்லிம் ஆதரவாளர்கள்

தற்போது நடந்து முடிந்துள்ள ஈராக் நாடாளுமன்ற தேர்தலில் வெறும் 41 சதவிகித வாக்காளர்களே வாக்களித்தனர் என அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

திங்கள் இரவில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட அல்-சதரின் ஷியா முஸ்லிம் ஆதரவாளர்கள்

மதப் பிரிவுகள் மற்றும் இன அடிப்படையிலான அதிகாரப் பகிர்வு என்பது உண்மையில் நடக்காது என்ற இராக்கியர்களின் நம்பிக்கையின்மையே பெரும்பாலானவர்கள் தேர்தலில் வாக்களிக்காமல் போனதற்கு காரணமாகப் பார்க்கப்படுகிறது.

ஈராக்கில் ஆட்சியில் இருந்த சதாம் உசேன் அமெரிக்கா தலைமையிலான படையெடுப்பால் 2003ஆம் ஆண்டு பதவியிலிருந்து அகற்றப்பட்ட பின்னர் மேட்டு குடியை சேர்ந்த சிலரே ஆட்சி அதிகாரத்தை தங்கள் வசம் வைத்துள்ளனர்.

2019ஆம் ஆண்டு இராக்கில் ஊழல், வேலையின்மை, அரசின் சேவைகள் தரமற்ற வகையில் இருப்பது உள்ளிட்டவற்றின் காரணமாக மிகப்பெரிய அளவில் போராட்டங்கள் வெடித்தன.

இந்தப் போராட்டத்தின்போது ஈராக் பாதுகாப்பு படைகள் மற்றும் இரானுக்கு ஆதரவான சில தீவிரவாத அமைப்புகள், குறிப்பாக பாப்புலர் மொபைலைசேஷன் குழுவைச் சேர்ந்த தீவிரவாதிகள் உள்ளிட்டோரால் சுட்டுக் கொல்லப்பட்ட 550க்கும் அதிகமான போராட்டக்காரர்கள் உயிரிழந்தனர்.

இந்த நாடாளுமன்ற தேர்தல் 2022ஆம் ஆண்டுதான் நடைபெற இருந்தது.

ஆனால் 2019 இல் நடந்த பெரும் போராட்டங்கள் காரணமாக ஆறு மாதங்கள் முன்கூட்டியே நடத்தப்பட்டது.

இதுவரை அரசியல் கட்சிகள் மட்டுமே தேர்தலில் பங்கேற்க முடியும் போராட்டங்களுக்கு பின்பு சுயேச்சை வேட்பாளர்களும் இந்த தேர்தலில் பங்கெடுப்பதற்கு வழிவகை செய்யப்பட்டது.

2018ஆவது ஆண்டு நடந்த தேர்தலுடன் ஒப்பிடும் பொழுது அல்சத்ரின் கூட்டணி 19 இடங்கள் கூடுதலாக வெற்றி பெற்றுள்ளதாக ஆரம்பக்கட்ட முடிவுகள் தெரிவிக்கின்றன என அரசுக்குச் சொந்தமான இராக் நியூஸ் ஏஜென்சி செய்தி முகமை தெரிவிக்கிறது.

2019ஆம் ஆண்டு நடந்த போராட்டத்திற்கு ஆதரவாக போராட்டங்களின் போது புதிய சீர்த்திருத்தங்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த வேட்பாளர்களும் இந்த தேர்தலில் சில இடங்களில் வென்று உள்ளனர் என ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவிக்கிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...