Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்த கோட்டாபயவின் ஆட்சி தொடர்ந்தால் பட்டினியால் மக்கள் செத்து மடிவர்! வஜிர

T

The Leader Desk

அக்டோபர் 12, 2021 • 5:02 PM

பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்த கோட்டாபயவின் ஆட்சி தொடர்ந்தால் பட்டினியால் மக்கள் செத்து மடிவர்! வஜிர 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • காலி - ஹக்மீமன பகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
  • உலகில் தரமான உரத்தை 350 ரூபாவுக்கு வழங்க முடியாது.
  • கோட்டாபய அரசு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்தது.
எழுத்து அளவு:

காலி - ஹக்மீமன பகுதியில் நேற்று நடைபெற்ற கூட்டமொன்றில் வைத்து ஐக்கிய தேசியக் கட்சியின் தவிசாளர் வஜிர அபேவர்தன (Vajira Abeywardena) இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

"காலி மாவட்டத்தில் தேயிலைத் தொழிற்துறைகளில் ஈடுபடுவோர் பாரிய பிரச்சினைகளை எதிர்நோக்கி வருகின்றனர். உரத் தட்டுப்பாடு காரணமாக தேயிலை செய்கை வழமைக்குத் திரும்ப இன்னும் ஒன்றரை ஆண்டுகள் தேவைப்படும். உலகில் தரமான உரத்தை 350 ரூபாவுக்கு வழங்க முடியாது.

கோட்டாபய அரசு ஆட்சியைப் பிடிக்கும் நோக்கில் பொய் வாக்குறுதிகளை மக்களுக்கு அளித்திருந்தது. தரம் குறைந்த உர வகைகளைப் பயன்படுத்துவதனால் மண் வளம் இழக்கும்.

இலங்கையில் அடுத்த ஆண்டு நடுப்பகுதி அளவில் அத்தியாவசிய உணவுப் பொருட்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை மக்களுக்கு ஏற்படும்.

தற்போதைய அரசு எவ்வித நோக்கமும், திட்டமும் இன்றி நாட்டை ஆட்சி செய்வதனால் நாடு பாரிய நெருக்கடிகளை எதிர்நோக்கி வருகின்றது. இந்த அரசின் ஆட்சி தொடர்ந்தால் பட்டினியால் மக்கள் செத்து மடிவார்கள்" - என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...