Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஆப்கானிஸ்தான் விவகாரங்களை கவனிக்க பாகிஸ்தானில் தனிப் பிரிவு! இம்ரான் கான் உத்தரவு

T

The Leader Desk

அக்டோபர் 9, 2021 • 5:21 PM

ஆப்கானிஸ்தான் விவகாரங்களை கவனிக்க பாகிஸ்தானில் தனிப் பிரிவு! இம்ரான் கான் உத்தரவு

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் தொடர்பான விவகாரங்களை கவனிப்பதற்காக ஒரு தனி அமைப்பு ஏற்படுத்த பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) மொயீத் யூசுப், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வெண்டி ஷெர்மனை சந்தித்து, ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தலீபான் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
  • ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கான சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் பாகிஸ்தானுக்குள் எதிர்மறையான ஊடுருவலைத் தடுக்க பயனுள்ள எல்லை மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களை கவனிப்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

இந்த ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், ஆப்கானிஸ்தான் தொடர்பான விவகாரங்களை கவனிப்பதற்காக ஒரு தனி அமைப்பு ஏற்படுத்த பிரதமர் இம்ரான் கான் உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவிகளை மேற்கொள்வதற்கான சர்வதேச ஒருங்கிணைப்பு மற்றும் பாகிஸ்தானுக்குள் எதிர்மறையான ஊடுருவலைத் தடுக்க பயனுள்ள எல்லை மேலாண்மை உள்ளிட்ட விவகாரங்களை கவனிப்பதற்காக இந்த அமைப்பு ஏற்படுத்தப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

சில நாட்களுக்கு முன்பு, பாகிஸ்தான் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் (NSA) மொயீத் யூசுப், அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் வெண்டி ஷெர்மனை சந்தித்து, ஆப்கானிஸ்தானில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள தலீபான் அரசாங்கத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றிய பின்னர், அங்கு அமைக்கப்பட்டுள்ள இடைக்கால அரசாங்கத்தை உலக நாடுகள்  அங்கீகரிக்க வேண்டும் என பாகிஸ்தான் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீனா மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட ஒரிரு நாடுகளைத் தவிர, வேறு எந்த நாடும் இதுவரை தலீபான்களின் அரசை வெளிப்படையாக ஆதரிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...