Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஆசிரியர்களின் கோரிக்கையைச் செவிமடுக்காது அரசு செயற்படுவது முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது! கஜேந்திரகுமார்

T

The Leader Desk

அக்டோபர் 9, 2021 • 11:41 AM

ஆசிரியர்களின் கோரிக்கையைச் செவிமடுக்காது அரசு செயற்படுவது முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது! கஜேந்திரகுமார் 

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவிக்கையில், "ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் மிகப்பெரிய நெருக்கடியை நாட்டில் ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனைத் தீர்க்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதுள்ளது.
  • ஆசிரியர் சங்கங்கள் சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்தவே கூறுகின்றனர்.
  • அதேபோல் 2018ஆம் ஆண்டு முன்னைய அரசு முன்வைத்த யோசனையை அரசு நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதாகக் கூறுவதில் நியாயம் இல்லை.
  • அதுமட்டுமல்ல, ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்க அரசு தீர்மானித்துள்ளது.
எழுத்து அளவு:

இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் நேற்று அவர் மேலும் தெரிவிக்கையில்,

"ஆசிரியர் சங்கங்களின் போராட்டம் மிகப்பெரிய நெருக்கடியை நாட்டில் ஏற்படுத்தியுள்ள நிலையில் அதனைத் தீர்க்க அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்காதுள்ளது. காலையில் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி. சபையில் இந்த விடயம் குறித்து கேள்வி எழுப்பியிருந்தார்.

அதற்கு அரச தரப்பினர், நவம்பரில் முன்வைக்கவுள்ள வரவு - செலவுத் திட்டத்தில் இதற்கான தீர்வுகளை வழங்குவதாகக் கூறியுள்ளனர்.

தீர்வுகளை வழங்குவதென்றால் நவம்பர் வரையில் கால அவகாசம் வழங்குவது எதற்கு? ஆசிரியர் சங்கங்களை அழைத்து இப்போதே அதற்கான வாக்குறுதியை வழங்கி நெருக்கடிகளைத் தவிர்த்துக்கொள்ள முடியும். ஆசிரியர் சங்கங்கள் சுபோதினி அறிக்கையை நடைமுறைப்படுத்தவே கூறுகின்றனர்.

அதேபோல் 2018ஆம் ஆண்டு முன்னைய அரசு முன்வைத்த யோசனையை அரசு நான்கு கட்டங்களாக நடைமுறைப்படுத்துவதாகக் கூறுவதில் நியாயம் இல்லை.

அதுமட்டுமல்ல, ஆசிரியர் சங்கங்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்ற நிலையில் 200 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளைத் திறக்க அரசு தீர்மானித்துள்ளது. இது முற்று முழுதாக ஆசிரியர் சங்கங்களை சமூகத்துக்கு எதிராகத் திசை திருப்பும் நோக்கமேயாகும்.

பல்வேறு அபிவிருத்தி வேலைத்திட்டங்களுக்காகப் பல மில்லியன் ரூபாக்களை அரசு ஒதுக்குகின்ற நிலையில், பல மில்லியன் ரூபா கறுப்புப்பணம் வெளிவந்துகொண்டிருக்கும் நிலையில் ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கையைச் செவிமடுக்காது அரசு செயற்படுவது முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது.

கடந்த 2018ஆம் ஆண்டு முன்னைய அரசு ஆசிரியர் பிரச்சினைகள் குறித்து முன்வைத்த யோசனைகளை ஏற்றுக்கொள்வதாக ஆசிரியர் சங்கங்கள் கூறியுள்ளன. ஆகவே, அரசு இந்த விடயங்களில் கூடிய கவனம் செலுத்த வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஆசிரியர்களின் கோரிக்கையைச் செவிமடுக்காது அரசு செயற்படுவது முரண்பாடுகளை ஏற்படுத்துகின்றது! கஜேந்திரகுமார் | Tamil Leader | We Lead the Nation