Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இந்த வாரத்தில் இரண்டாவது முறை முடங்கியது பேஸ்புக்!

T

The Leader Desk

அக்டோபர் 9, 2021 • 11:14 AM

இந்த வாரத்தில் இரண்டாவது முறை முடங்கியது பேஸ்புக்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது.
  • சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக அவற்றை பயன்படுத்த முடியாமல் பயனர்கள் சிரமப்பட்டனர்.
  • இந்த சேவை முடக்கத்தால் ரூ.52 ஆயிரம் கோடி வரை பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கு இழப்பு ஏற்பட்டது. சேவை முடக்கம் தொடர்பாக பயனர்களிடமும் மார்க் சக்கர்பெர்க் மன்னிப்புக் கோரினார்.
  • இந்நிலையில், சர்வதேச அளவில் ஒருசில பகுதிகளில் வாட்ஸ் அப் (whatsapp), பேஸ்புக்(facebook), இன்ஸ்டாகிராம் (instagram)ஆகியவற்றின் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சில மணி நேரங்களுக்கு பின்னர் இந்த பாதிப்பு சரி செய்யப்பட்டது.
எழுத்து அளவு:

பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவைகளில் மீண்டும் கோளாறு ஏற்பட்டது. உலகம் முழுக்க இரு சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்தனர். சில மணி நேரங்கள் இடையூறு ஏற்பட்டதை தொடர்ந்து சேவைகள் சரி செய்யப்பட்டன.

பேஸ்புக், வாட்ஸ் அப் மற்றும் இன்ஸ்டாகிராம் சேவை இந்த வாரத்தில் மீண்டும் முடங்கியதால் பேஸ்புக் நிர்வாகம் பயனர்களிடம் மன்னிப்புக் கோரியது.

வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் ஆகியவற்றை பிரபல சமூக ஊடகமான பேஸ்புக்  நிர்வகித்து வருகிறது.  கடந்த திங்களன்று இவற்றி சேவை பாதிக்கப்பட்டது. சுமார் 6 மணி நேரத்துக்கு மேலாக அவற்றை பயன்படுத்த முடியாமல் பயனர்கள் சிரமப்பட்டனர். பல மணிநேர போராட்டத்திற்கு பின்னர் கோளாறு செய்யப்பட்டது.

இந்த சேவை முடக்கத்தால் ரூ.52 ஆயிரம் கோடி வரை பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பெர்க்கிற்கு இழப்பு ஏற்பட்டது.  சேவை முடக்கம் தொடர்பாக பயனர்களிடமும் மார்க் சக்கர்பெர்க் மன்னிப்புக் கோரினார்.

இந்நிலையில், சர்வதேச அளவில் ஒருசில பகுதிகளில் வாட்ஸ் அப் (whatsapp), பேஸ்புக்(facebook), இன்ஸ்டாகிராம்  (instagram)ஆகியவற்றின் சேவை மீண்டும் பாதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.  சில மணி நேரங்களுக்கு பின்னர் இந்த பாதிப்பு சரி செய்யப்பட்டது.

இந்திய நேரப்படி நேற்று (அக்டோபர் 8) நள்ளிரவு 11.50 மணி முதல் அக்டோபர் 9 அதிகாலை 2.20 மணி வரை சேவைகள் முடங்கியதாக தனியார் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இந்த நேரத்தில் இன்ஸ்டாகிராம் செயலியின் அம்சங்கள் சீராக இயங்கவில்லை. 

இரு சேவைகள் முடங்கியதை அடுத்து பயனர்கள் டுவிட்டரில் இன்ஸ்டாகிராம் டவுன் எனும் ஹேஷ்டேக் மூலம் சேவைகள் முடங்கியதாக குற்றம்சாட்டினர். இதனால் #instagramdown மற்றும் #instadown எனும் ஹேஷ்டேக் டுவிட்டரில் வைரலானது.

பின் பேஸ்புக், 'எங்களின் சேவைகளை பயன்படுத்த முடியவில்லை என பயனர்கள் தெரிவித்து வருகின்றனர். இதனை சரிசெய்யும் பணிகளில் ஈடுபட்டு வருகிறோம்,' என தெரிவித்தது.

கட்டமைப்பில் செய்யப்பட்ட மாற்றம் (configuration change) காரணமாக ஒருசில பயனர்களுக்கு சேவைபாதிப்பு ஏற்பட்டதாக பேஸ்புக் நிர்வாகம்தெரிவித்துள்ளது.  கடந்த முறை ஏற்பட்ட சேவை பாதிப்பும் இதுவும் ஒன்றல்ல என்றும் விளக்கமளித்துள்ளது.

கடந்த இரண்டு மணி நேரத்தில் எங்கள் தயாரிப்புகளை உங்களால் அணுக முடியவில்லை என்பது தொடர்பாக நாங்கள் வருந்துகிறோம்.  ஒருவருக்கொருவர் தொடர்பு கொள்ள நீங்கள் எங்களை எவ்வளவு சார்ந்துள்ளீர்கள் என்பது எங்களுக்குத் தெரியும். சிக்கலை சரி செய்துவிட்டோம்- இந்த வாரம் உங்கள் பொறுமைக்கு மீண்டும் நன்றி” என்று பேஸ்புக் தெரிவித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...