Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மாகாண சபை தேர்தல் மார்ச் மாதத்திற்கு முன்னர்! பஸில்

T

The Leader Desk

அக்டோபர் 8, 2021 • 4:58 PM

மாகாண சபை தேர்தல் மார்ச் மாதத்திற்கு முன்னர்! பஸில்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதற்காக மாகாண சபைத் தேர்தல்கள் சட்டமூலம் புதிதாக நாடாளுமன்றில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும்.
  • இந்த தெரிவுக்குழுவுக்குப் புதிதாக சேர்க்கப்பட்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும், எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் இன்றைய கூட்டத்துக்கு முதல் தடவையாக சமூகம் தந்தனர்.
  • இவ்விடயத்தில் வீண்கால தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.
எழுத்து அளவு:

இதற்காக மாகாண சபைத் தேர்தல்கள் சட்டமூலம் புதிதாக நாடாளுமன்றில் கொண்டுவந்து நிறைவேற்றப்பட வேண்டும். இவ்விடயத்தில் வீண்கால தாமதங்களைத் தவிர்ப்பதற்காக, இது தொடர்பில் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் எம்.பி. நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்திருக்கும் தனிநபர் பிரேரணையைக் கையில் எடுத்து புதிய மாற்றங்களோடு அதை விரைந்து நிறைவேற்றுவதற்கு ஆராயப்படுவதாகவும் இன்று நாடாளுமன்றத் தெரிவுக்குழுக் கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

தேர்தல் முறைமைகள் தொடர்பாக ஆராய்வதற்கு நியமிக்கப்பட்ட அமைச்சர் தினேஷ் குணவர்தன தலைமையிலான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் கூட்டம் இன்று நாடாளுமன்றில் நடைபெற்றது.

இந்த தெரிவுக்குழுவுக்குப் புதிதாக சேர்க்கப்பட்ட நிதி அமைச்சர் பஸில் ராஜபக்சவும், எதிர்க்கட்சி உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் இன்றைய கூட்டத்துக்கு முதல் தடவையாக சமூகம் தந்தனர். அச்சமயத்தில் மாகாண சபைத் தேர்தலை உடன் நடத்துவதற்கு அரசு தீர்மானித்துள்ளது என பஸில் ராஜபக்ச கூறினார்.

எதிர்வரும் மார்ச் மாதத்துக்கு முன்னர் தேர்தலை நடத்த வேண்டும் என்று அரசு தீர்மானித்துள்ளது எனவும், அதற்காக மாகாண சபைத் தேர்தல் சட்டங்களை உடனடியாக நிறைவேற்ற வேண்டிய தேவை இருக்கின்றது எனவும் அவர் அங்கு சொன்னார்.

இந்த விடயத்தில் சில சமயங்களில் நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை ஆதரவு தேவைப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...