Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நல்லாட்சி காலத்தில் கணினி கொள்வனவில் பல கோடி மேலதிக செலவு!

T

The Leader Desk

அக்டோபர் 8, 2021 • 4:32 PM

நல்லாட்சி காலத்தில் கணினி கொள்வனவில்  பல கோடி மேலதிக செலவு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை போக்குவரத்து சபை 2018ஆம் ஆண்டு 139 கணினிகள், 74 மடிக்கணினிகளை ஒரு கோடியே 52 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு கொள்முதல் சபை மதிப்பீடு செய்திருந்தபோது, இத்தொகையைவிட அதிகமான தொகைக்கே கணினிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
  • இதற்கமைய 800 கணினிகளும், 47 மடிக்கணினிகளும் 11 கோடியே 33 இலட்சத்து மூவாயிரத்து 750 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.
  • இதனால் 2018ஆம் ஆண்டு கணினிகளின் கொள்வனவுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையைவிட 8 எட்டு கோடியே 99 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபா போக்குவரத்து சபையின் கணக்கின் ஊடாக செலவு செய்யப்பட்டிருப்பதாக கோப் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இலங்கை போக்குவரத்துச் சபை தொடர்பான 2017, 2018ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு (06) கூடியபோதே இந்த விடயம் வெளிப்பட்டது.
எழுத்து அளவு:

இலங்கை போக்குவரத்து சபை 2018ஆம் ஆண்டு 139 கணினிகள், 74 மடிக்கணினிகளை ஒரு கோடியே 52 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கு கொள்வனவு செய்வதற்கு கொள்முதல் சபை மதிப்பீடு செய்திருந்தபோது, இத்தொகையைவிட அதிகமான தொகைக்கே கணினிகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கமைய 800 கணினிகளும், 47 மடிக்கணினிகளும் 11 கோடியே 33 இலட்சத்து மூவாயிரத்து 750 ரூபாவுக்குக் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இதனால் 2018ஆம் ஆண்டு கணினிகளின் கொள்வனவுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட தொகையைவிட 8 எட்டு கோடியே 99 இலட்சத்து 77 ஆயிரத்து 500 ரூபா போக்குவரத்து சபையின் கணக்கின் ஊடாக செலவு செய்யப்பட்டிருப்பதாக கோப் குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை போக்குவரத்துச் சபை தொடர்பான 2017, 2018ஆம் நிதியாண்டுக்கான கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை மற்றும் அதன் தற்போதைய நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் சரித ஹேரத் தலைமையில் கோப் குழு (06) கூடியபோதே இந்த விடயம் வெளிப்பட்டது.

ertret

உரிய செயல்முறை இல்லாமல் பணத்தை செலவழிப்பது குறித்து கோப் தலைவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.

பாழடைந்த உபகரணங்கள்

அத்துடன், 125 சொகுசு பஸ்களுக்கு கமரா மற்றும் ஜீ.பி.எஸ் கட்டமைப்பைப் பேணுவதற்குத் தேவையான கருவிகளைக் கொள்வனவு செய்ய தனியார் நிறுவனத்துடன், 33,628,840 ரூபாவுக்கு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இருந்தபோதும் இந்தக் கருவிகளில் சிலவற்றைத் தவிர ஏனையவை இயங்கும் நிலையில் காணப்படவில்லையென்றும் கோப் குழுவில் தெரியவந்தது.

விசேடமாக இந்த பஸ்களில் பணியாற்றுபவர்கள் வேண்டுமென்றே சேதத்தை ஏற்படுத்துவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

2018ஆம் ஆண்டு கொள்முதல் திட்டத்துக்கு அமைய 1000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்களுக்கு 35 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டு கொள்வனவு செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு பணிப்பாளர் சபையின் அனுமதியும் வழங்கப்பட்டிருந்தது.

இருந்தபோதும் 2018ஆம் ஆண்டு 2000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்களைக் கொள்வனவு செய்ய 75,900,000 ரூபா செலவுசெய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய அனுமதி இன்றி 1000 இலத்திரனியல் பஸ் டிக்கட் இயந்திரங்கள் கொள்வனவு செய்யப்பட்டிருப்பதுடன், இந்தக் கொள்வனவின் ஊடாக எதிர்பார்த்த நோக்கம் நிறைவேறாமை தொடர்பில் குழு கவனம் செலுத்தியது.

இது தொடர்பில் ஒரு மாதத்துக்குள் கோப் குழுவுக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுக்கப்பட்டது.

அத்துடன், பணிப்பாளர் சபையின் பதவிகள் சிலவற்றின் குறைபாடுகள் குறித்தும், பயன்பாட்டில் இருக்கும் 5921 பஸ்களின் எண்ணிக்கை தொடர்பிலும், தற்பொழுது பயன்பாட்டிலிருந்து நீக்கப்பட்டுள்ள பஸ்கள் மற்றும் 10 வருடங்கள் பழைமைவாய்ந்த 2742 பஸ்கள் தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

கோப் குழுக் கூட்டத்தில் கௌரவ அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே, கௌரவ இராஜாங்க அமைச்சர் டி.வி.சானக, கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ரவூப் ஹக்கீம், ஜகத் புஷ்பகுமார, கலாநிதி ஹர்ஷ.டி.சில்வா, மதுர விதானகே, பிரேம்நாத்.சி தொலவத்த ஆகியோரும், போக்குவரத்து அமைச்சின் செயலாளர், போக்குவரத்து சபையின் அதிகாரிகள் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டிருந்தனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...