Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

மொடர்னா, ஆப்பிரிக்காவில் மருந்து தயாரிப்பு ஆலையை தொடங்கப்போகின்றது!

T

The Leader Desk

அக்டோபர் 7, 2021 • 5:13 PM

மொடர்னா, ஆப்பிரிக்காவில் மருந்து தயாரிப்பு ஆலையை தொடங்கப்போகின்றது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
  • இதற்கிடையில் பைசர், பையோ என்டெக் ஆகிய நிறுவனங்கள், ஆப்பிரிக்காவில் தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆலைகளை அமைக்க கடந்து ஜூலை மாதம் ஒப்பந்தம் செய்தன.
  • அதன்படி தற்போது மாடர்னா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 500 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் விரைவில் ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆலையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
  • மேலும் அந்த புதிய தொழிற்சாலையில் ஆண்டுக்கு 50 கோடி டோஸ் தடுப்பூசிகளை தயாரிக்க இலக்கு வைத்துள்ளதாகவும் மாடர்னா நிறுவனம் கூறியுள்ளது.
எழுத்து அளவு:

உலகம் முழுவதும் கொரோனா தொற்றில் இருந்து மக்களை பாதுகாக்கும் நடவடிக்கையாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தந்த நாடுகளின் அரசுகள் சார்பில் இலவச தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பூசிகள் செலுத்தப்படுகின்றன. கொரோனா தொற்றை விரைவில் கட்டுக்குள் கொண்டு வர, பொதுமக்கள் அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என உலக சுகாதார அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

உலக அளவில் ஆப்பிரிக்காவில் மிகவும் குறைந்த அளவிலான கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஐ.நா.வின் ‘கோவேக்ஸ்’ திட்டத்தின் கீழ் தடுப்பூசி ஏற்றுமதி குறைந்ததால், ஆப்பிரிக்க நாடுகளுக்கு போதுமான தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்யப்படவில்லை.

இதற்கிடையில் பைசர், பையோ என்டெக் ஆகிய நிறுவனங்கள், ஆப்பிரிக்காவில் தடுப்பு மருந்து தயாரிக்கும் ஆலைகளை அமைக்க கடந்து ஜூலை மாதம் ஒப்பந்தம் செய்தன. இதனை தொடர்ந்து மற்றொரு அமெரிக்க உயிரி தொழில்நுட்பவியல் நிறுவனமான மாடர்னா, ஆப்பிரிக்காவில் மருந்து தயாரிப்பு ஆலையை தொடங்குவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்தது.

அதன்படி தற்போது மாடர்னா நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சுமார் 500 மில்லியன் டாலர்கள் முதலீட்டில் விரைவில் ஆப்பிரிக்காவில் கொரோனா தடுப்பூசி தயாரிக்கும் ஆலையை தொடங்க இருப்பதாக அறிவித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள மாடர்னா தொழிற்சாலையைப் போல அனைத்து திறன்களையும் கொண்டதாக, இந்த புதிய தொழிற்சாலையை அமைக்க திட்டமிட்டுள்ளதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அந்த புதிய தொழிற்சாலையில் ஆண்டுக்கு 50 கோடி டோஸ் தடுப்பூசிகளை தயாரிக்க இலக்கு வைத்துள்ளதாகவும் மாடர்னா நிறுவனம் கூறியுள்ளது. தற்போது தொழிற்சாலை அமைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகள் நடந்து வருவதாகவும், அங்கு உள்ளூர் மக்கள் பெரும்பான்மையான அளவில் பணியமர்த்தப்படுவார்கள் என்றும் மாடர்னா நிறுவனம் கூறியுள்ளது.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

மொடர்னா, ஆப்பிரிக்காவில் மருந்து தயாரிப்பு ஆலையை தொடங்கப்போகின்றது! | Tamil Leader | We Lead the Nation