Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

விற்பனை செய்யப்படவுள்ள அரச சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளன!

T

The Leader Desk

அக்டோபர் 7, 2021 • 3:13 PM

விற்பனை செய்யப்படவுள்ள அரச சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளன!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெறுமதிமிக்க அரச சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் அந்த சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.
  • கொழும்பு துறைமுக அதிகாரசபையில் உள்ள 13 ஏக்கர் நிலம் மற்றும் அதன் கிடங்குகள் சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுவதால் துறைமுகத்திற்கு வருட வருமானமாக சுமார் 100 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும்.
  • மேலும், இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 150 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:

பெறுமதிமிக்க அரச சொத்துக்களை விற்பனை செய்ய முயற்சிகள் முன்னெடுக்கப்படுவதாக, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவுக்கு எழுதிய கடிதத்தில் அந்த சங்கங்கள் குறிப்பிட்டுள்ளன.

அரசாங்கத்தின் மக்கள் விரோதத் திட்டத்தை முற்றிலுமாக எதிர்க்கும் தேசிய தொழிலாளர் ஆலோசனை சபையின், தொழிற்சங்கங்கள், அந்த நிறுவனங்களில் செயற்படும் தொழிற்சங்க இயக்கங்களின் தொழிற்சங்க  செயற்பாடுகளை ஆதரிக்க தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதியை எச்சரித்துள்ளன.

அமெரிக்க நிறுவனத்துடன் தற்போதைய அரசாங்கம் கையெழுத்திட்டுள்ள ஒப்பந்தம் உள்ளிட்ட அனைத்து விடயங்கள் தொடர்பான ஆவணங்களும் நாட்டின் குடிமக்களை பாதிக்கும் என்பதால், அவற்றை இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் ஊடாக கூடிய விரைவில் பகிரங்கப்படுத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் உட்பட அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி அரசின் தீர்மானங்களுக்கு பரிந்துரைகளை சமர்ப்பிக்கவும், ஜனாதிபதியின் விசேட தீர்மானமாக இதனை உடனடியாக அறிவிக்கவும் தாம வலியுறுத்துவதாக அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

தொழிற்சங்கத் தலைவர்களின் கருத்துக்களுக்கு அமைய, பின்வருவரும் அரசு சொத்துக்களை விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

01. இலங்கை மின்சார சபைக்கு சொந்தமான கெரவலப்பிட்டிய யுகதனவ் மின்நிலையத்தில் அரசுக்கு சொந்தமான 40% பங்குகளை அமெரிக்க நிறுவனத்திற்கு எந்த விலைமனுக் கோரல் நடைமுறையும் இல்லாமல் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டமையானது, எதிர்காலத்தில் நம் நாட்டில் புதைபடிவ எரிபொருட்களுக்கு பதிலாக இயற்கை திரவ எரிவாயுவை (எல்என்ஜி) இறக்குமதி செய்து விநியோகிப்பதற்கான ஏகபோக அதிகாரத்தை அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்குதல்.

02. கொழும்பு துறைமுக அதிகாரசபையில் உள்ள 13 ஏக்கர் நிலம் மற்றும் அதன் கிடங்குகள் சீன நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படுவதால் துறைமுகத்திற்கு வருட வருமானமாக சுமார் 100 மில்லியன் டொலர் இழப்பு ஏற்படும். மேலும், இந்த நிலத்தின் மதிப்பு சுமார் 150 மில்லியன் டொலர் என மதிப்பிடப்பட்டுள்ளது.

03. எரிபொருளை இறக்குமதி செய்வதற்கும், சுத்திகரிப்பு நிலையத்தை ஒரு பொறுப்பாக பராமரிப்பதற்கும் இலங்கை பெற்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் பொறுப்பிலிருந்து விலகி மற்றொரு போட்டி நிறுவனத்தை நிறுவுவதற்கான மசோதாவை நாடாளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான மசோதாவை உருவாக்குதல். அதேவேளை, மேலதிகமாக, திருகோணமலையில் உள்ள எண்ணெய் கிடங்கு வளாகம் குறித்த இந்தியாவுடன் தற்போதுள்ள செய்துகொண்டுள்ள குத்தகை ஒப்பந்தத்தை தொடர்ந்து முன்னெடுத்தல் மற்றும் இந்த எண்ணெய் கிடங்கு பண்னையின் பெரும்பகுதியை இந்திய நிறுவனத்தால் கட்டுப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளமை.

நாட்டின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாகவும், நாட்டின் நீண்டகால பொருளாதார அபிவிருத்தி நிகழ்ச்சி நிரலை முழுமையாக மீறுவதாகவும் உள்ள இந்த செயல்முறையை எதிர்ப்பதாக தொழிற்சங்கத் தலைவர்கள் ஏற்கனவே அரசாங்கத்திற்கு தெரிவித்துள்ளனர்.

இலங்கை சுதந்திர தொழிற்சங்க கூட்டமைப்பு, சுதந்திர வர்த்தக வலயங்கள் மற்றும் பொது சேவைகள் ஊழியர் சங்கம், இலங்கை தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு, தேசிய கடல் கண்காட்சிகளின் தேசிய சங்கம், தேசிய ஊழியர் சங்கம், இலங்கை வர்த்தக தொழில் மற்றும் பொது தொழிலாளர் சங்கம், இலங்கை தொழிலாளர் கூட்டமைப்பு, இலங்கை வங்கி ஊழியர் சங்கம் ஆகியன இணைந்து ஜனாதிபதிக்கு கடிதத்தை அனுப்பியுள்ளன. 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

விற்பனை செய்யப்படவுள்ள அரச சொத்துக்கள் தொடர்பான விபரங்கள் ஜனாதிபதியிடம் கோரப்பட்டுள்ளன! | Tamil Leader | We Lead the Nation