Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து செயற்படுவோம்! சாணக்கியன்

T

The Leader Desk

அக்டோபர் 7, 2021 • 2:20 PM

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து செயற்படுவோம்! சாணக்கியன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
  • ஆனால் தன்னிடம் அப்படி அவர்கள் கூறவில்லை என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
  • இதன்போது மேலும் தெரிவிக்கையில், அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில் நாங்கள் சந்தித்து பேசியிருந்தோம்.
எழுத்து அளவு:

நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

அண்மையில் அச்சுறுத்தப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளை அண்மையில் நாங்கள் சந்தித்து பேசியிருந்தோம்.

நாங்கள் அவர்களைச் சந்தித்துப் பேசும் போது, அவர்கள் அமர்வதற்கு கதிரைகள் கூட அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

எனினும் நாங்கள் வலியுறுத்தி அவர்கள் அமர்ந்து பேசக் கதிரைகளைப் பெற்றுக்கொடுத்தோம்.

அவர்களை நாங்கள் சந்தித்துப் பேசும் போது, சிறைச்சாலை ஊழியர்களும் அருகில் இருந்தமையினால் பல விடயங்களைப் பேச முடியவில்லை.

எனினும் அவர்கள் தங்களை யாழ்ப்பாணத்திற்கு மாற்றுவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு எங்களிடம் தெரிவித்தனர்.

ஆனால் தன்னிடம் அப்படி அவர்கள் கூறவில்லை என நீதி அமைச்சர் தெரிவித்துள்ளார். எனினும் அவர்கள் எங்களிடம் அதனைத் தெரிவித்தார்கள்.

அதேபோன்று நடைபெற்ற சம்பவத்திற்கு நீதி அமைச்சர் மன்னிப்பு கோரியமையினை நாங்கள் வரவேற்கின்றோம்.

இதேவேளை, அண்மையில் சில அரசியல் கைதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். முகப்புத்தகத்தில் பதிவிட்ட குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் அனைவரின் விடுதலைக்காகவும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற வகையில் நாங்கள் தொடர்ந்தும் பாடுபடுவோம் என குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தொடர்ந்து செயற்படுவோம்! சாணக்கியன் | Tamil Leader | We Lead the Nation