Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

நிருபமா மற்றும் நடேசனால் இலங்கைக்கு மற்றொரு பிரச்சாரம்!

T

The Leader Desk

அக்டோபர் 4, 2021 • 4:51 PM

நிருபமா மற்றும் நடேசனால் இலங்கைக்கு மற்றொரு பிரச்சாரம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக வல்லரசுகள் மற்றும் 300ற்கும் மேற்பட்ட பணக்காரர்கள் ஆகியோரின் நிதி கொடுக்கல் வாங்கல் ள் குறித்து, 117 நாடுகளின் 600ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்களின் ஆய்வின் ஊடாக இலங்கையின் பெயர் உலகப் புகழ் பெற்றுள்ளது.
  • பண்டோரா பேப்பர்ஸ் என அழைக்கப்படும் சுமார், 11 மில்லியனுக்கும் அதிகமான ஆவணக்கோவைகளை வொஷிங்டனை தளமாகக் கொண்ட ஐசிஐஜே என்ற சர்வதேச புலனாய்வு ஊடவியலாளர்களின் கூட்டமைப்பால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
  • "நடேசன் சட்டத்தின் கீழ் மறைந்திருக்கும் பிற போலி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை அமைத்துள்ளார்.
  • ஏசியாசிட்டி ட்ரஸ்ட் நடேசனின் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்துள்ளதோடு அதன் சொத்து மதிப்பு சுமார் 18 மில்லியன் டொலர்களாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
எழுத்து அளவு:
90 நாடுகளின் தலைவர்கள் மற்றும் உலக வல்லரசுகள் மற்றும் 300ற்கும் மேற்பட்ட பணக்காரர்கள் ஆகியோரின் நிதி கொடுக்கல் வாங்கல் ள் குறித்து, 117 நாடுகளின் 600ற்கும் மேற்பட்ட
ஊடகவியலாளர்களின் ஆய்வின் ஊடாக இலங்கையின் பெயர் உலகப் புகழ் பெற்றுள்ளது.

பண்டோரா பேப்பர்ஸ் என அழைக்கப்படும் சுமார்,  11 மில்லியனுக்கும் அதிகமான ஆவணக்கோவைகளை வொஷிங்டனை தளமாகக் கொண்ட ஐசிஐஜே என்ற சர்வதேச புலனாய்வு ஊடவியலாளர்களின் கூட்டமைப்பால் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

ஆவணங்களுக்கு அமைய, மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் முன்னாள் பிரதி அமைச்சர் நிருபமா ராஜபக்ச மற்றும் ஒரு கோடீஸ்வரர் தொழிலதிபர் நடேசன் ஆகியோர் போலியான நிறுவனத்தின் ஊடாக லண்டன் மற்றும் சிட்னியில்  ஆடம்பர குடியிருப்புகளை கொள்வனவு செய்துள்ளனர்.

"நடேசன் சட்டத்தின் கீழ் மறைந்திருக்கும் பிற போலி நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை அமைத்துள்ளார். அந்த நிறுவனங்களை இலாபகரமான ஆலோசனை ஒப்பந்தங்களைப் பெறவும் மற்றும் இலங்கை அரசாங்கத்துடன் வர்த்தகத்தில் ஈடுபடும் நிறுவனங்களிடமிருந்து கலைப் படைப்புகளை கொள்வனவு செய்யவும் அவர் அவற்றைப் பயன்படுத்தியுள்ளார்” என ஐசிஐஜே குறிப்பிட்டுள்ளது.

”2018ஆம் ஆண்டில், பசிபிக் கமாடிடிஸ் நிறுவனத்தின் ஊடாக 31 ஓவியங்கள் மற்றும் பிற தெற்காசிய கலைப் படைப்புகள் ஜெனீவா ப்ரீபோர்ட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளதோடு, எனினும் அவைகளுக்கு எவ்வித வரியோ அல்லது கட்டணங்களோ செலுத்தப்படவில்லை.”

சிங்கப்பூரை தளமாகக் கொண்ட சேவை வழங்குநரும், நடேசனின் நீண்டகால ஆலோசகருமான ஏசியாசிட்டி டிரஸ்ட் நிறுவனத்திற்கு கிடைத்த இரகசிய மின்னஞ்சல்கள் ஊடாக,  2011ஆம் ஆண்டு நிலவரப்படி, 160 மில்லியன் டொலருக்கும் அதிக பெறுமதியுடைய சொத்துக்களை அவர் கொண்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.  ஏசியாசிட்டி ட்ரஸ்ட் நடேசனின் சில வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் அறக்கட்டளைகளை நிர்வகித்துள்ளதோடு அதன் சொத்து மதிப்பு சுமார்  18 மில்லியன் டொலர்களாகும் எனக் கூறப்பட்டுள்ளது.
image
எவ்வாறெனினும், நிருபமாவும் நடேசனும் தங்கள் அறக்கட்டளைகள் மற்றும் நிறுவனங்கள் பற்றிய புலனாய்வு ஊடகவியலாளர்களின் சர்வதேச கூட்டமைப்பின் கேள்விகளுக்கு பதிலளிக்க மறுத்துள்ளனர். 
 
image 1
தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

நிருபமா மற்றும் நடேசனால் இலங்கைக்கு மற்றொரு பிரச்சாரம்! | Tamil Leader | We Lead the Nation