Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இந்திய வெளியுறவு செயலாளருடன் ஹெலியில் செல்லவில்லை! உதய கம்மன்பில

T

The Leader Desk

அக்டோபர் 4, 2021 • 3:38 PM

இந்திய வெளியுறவு செயலாளருடன் ஹெலியில் செல்லவில்லை! உதய கம்மன்பில

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • எரிசக்தி அமைச்சில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.
  • மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் ஐ.தே.க அரசாங்கங்கள் கைச்சாத்திட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தங்களால் 100 தொட்டிகள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றைத் திரும்ப பெற முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.
  • திருகோணமலை எண்ணெய் தொட்டிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு, ஒருவர் அதன் அருகில் செல்ல வேண்டியதில்லை என்றும் உலகில் எங்கிருந்தும் கையெழுத்திட்டாலும் ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் குறிப்பிட்டார்.
எழுத்து அளவு:

எரிசக்தி அமைச்சில் இன்று (04) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றிய போதே அமைச்சர் இதனை தெரிவித்தார்.

1987 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் ஐ.தே.க அரசாங்கங்கள் கைச்சாத்திட்ட இந்திய-இலங்கை ஒப்பந்தங்களால் 100 தொட்டிகள் இந்தியாவுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகவும் அவற்றைத் திரும்ப பெற முயற்சிப்பதாகவும் அவர் கூறினார்.

எனினும், இந்திய வெளியுறவு செயலாளருடன் ஹெலிகொப்டர் மூலம் திருகோணமலைக்கு சென்று எரிபொருள் தொட்டிகளை வழங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படும் குற்றச்சாட்டுகள் நகைப்புக்குரியவை என்று தெரிவித்த அவர், அமைச்சரான பின்னர் யாருடனும் தான் ஹெலிகொப்டரில் செல்லவில்லை என்றும் தெரிவித்தார்.

திருகோணமலை எண்ணெய் தொட்டிகளை ஒப்படைப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு, ஒருவர் அதன் அருகில் செல்ல வேண்டியதில்லை என்றும் உலகில் எங்கிருந்தும் கையெழுத்திட்டாலும் ஒப்பந்தங்கள் செல்லுபடியாகும் என்றும் குறிப்பிட்டார்.

2023 இல் இந்த தொட்டிகள் இலங்கைக்கு திருப்பித் தரப்படும் என்று சிலர் கூறினாலும், இந்திய-இலங்கை ஒப்பந்தத்தில் அத்தகைய விதி இல்லை என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...