Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை, அரசியல் யாப்பினூடாக பெறு வேண்டும்! சம்பந்தன்

T

The Leader Desk

அக்டோபர் 2, 2021 • 4:56 PM

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை, அரசியல் யாப்பினூடாக பெறு வேண்டும்! சம்பந்தன்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் இன்று மாலை வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கு சில சக்திகள் முயற்சிப்பதாகவும் ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.
  • தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை, அரசியல் யாப்பினூடாக பெறுவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான குறிக்கோள் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.
எழுத்து அளவு:

கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் இன்று மாலை வௌியிட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

தேசிய பிரச்சினைக்கான அரசியல் தீர்வினை, அரசியல் யாப்பினூடாக பெறுவதே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பிரதான குறிக்கோள் என இரா.சம்பந்தன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை அரசாங்கமும் தலைவர்களும் உள்நாட்டிலும் சர்வதேசத்திற்கும் வழங்கிய வாக்குறுதிகளின் அடிப்படையில், இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொண்ட விடயங்கள் தொடர்பான தமது நிலைப்பாட்டில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு தௌிவாகவும் உறுதியாகவும் உள்ளதாக அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை சிதைப்பதற்கு சில சக்திகள் முயற்சிப்பதாகவும் ஒற்றுமையை உறுதி செய்யும் முகமாக சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடல்கள் இடம்பெறும் எனவும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

முழுமையான அனைத்து விடயங்களையும் உள்ளடக்கி, அரசியல் யாப்பினை உருவாக்க நாடு முயற்சிக்கும் தருணத்தில், ஒற்றுமையை பேணுவது அடிப்படையானது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் மத்தியில் தௌிவு இருக்க வேண்டுமே தவிர, அவர்களை குழப்பக்கூடாது எனவும் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

ஒன்றுபட்ட, பிளவுபடாத நாட்டிற்குள் சமத்துவம், நீதி மற்றும் சுய கௌரவம் என்பனவற்றின் அடிப்படையில் தீர்வினை எட்டும் குறிக்கோளில் உறுதியாக பயணிப்பதற்கு தௌிவின்மைகளையும் குழப்பங்களையும் தவிர்த்துக்கொள்ளுமாறு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் இராஜவரோதயம் சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...