Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

லசந்தவின் படுகொலை விசாரணை நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தில்!

T

The Leader Desk

அக்டோபர் 2, 2021 • 3:41 AM

லசந்தவின் படுகொலை விசாரணை நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தில்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இதன்படி, லசந்தவைத் தவிர மெக்ஸிகோ மற்றும் சிரியாவில் ஊடகவியலாளர்களான மிகெல் எஞ்சல் லோபேஸ் வெலஸ்கோ மற்றும் நபில் அல்-ஷர்பானி ஆகியவர்களின் படுகொலை சம்பந்தமான முறைப்பாடுகளும் விசாரிக்கப்படவுள்ளன.
  • நெதர்லாந்தின் ஹேக் நகரில் கூடும் இந்த நீதிமன்றத்தில் நவம்பர் 02ம் திகதி காலை 9.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவுள்ளன.
  • ‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 13 வருடங்கள் கடந்த நிலையிலும், இலங்கையில் எந்தவொரு சட்ட வல்லுநராலோ, நீதிமன்ற செயற்பாட்டினாலோ அந்த படுகொலையை செய்த கொலையாளிகளை வெளிக்கொணர முடியவில்லை.
  • மாத்திரமல்ல, பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்த குற்றத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந் 13 படை வீரர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.
எழுத்து அளவு:

2009 ஜனவரி 8ம் திகதி படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க சம்பந்தமாக இலங்கையில் நடைபெற்ற விசாரணைகளில் நம்பகத்தன்மை இல்லையென்பதால், Free Press Ltd, எல்லையற்ற நிருபர்கள் மற்றும் ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு (CPJ)    மேலும் பல ஊடகவியலாளர்களின் படுகொலைகள் சம்பந்தமாகவும் சான்றுகளை முன்வைத்து அவர்களின் படுகொலைகளை விசாரிப்பதற்கு மக்கள் நீதி மன்றமொன்றை கூட்டுமாறும் கோரியிருந்தன.

இதன்படி, லசந்தவைத் தவிர மெக்ஸிகோ மற்றும் சிரியாவில் ஊடகவியலாளர்களான மிகெல் எஞ்சல் லோபேஸ் வெலஸ்கோ மற்றும் நபில் அல்-ஷர்பானி ஆகியவர்களின் படுகொலை சம்பந்தமான முறைப்பாடுகளும் விசாரிக்கப்படவுள்ளன. நெதர்லாந்தின் ஹேக் நகரில் கூடும் இந்த நீதிமன்றத்தில் நவம்பர் 02ம் திகதி காலை 9.00 மணியிலிருந்து மாலை 6.00 மணிவரை குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்படவுள்ளன.

வெளிப்படையான வழக்கு விசாரணைகளுக்கு பிரபலமான மனித உரிமை வழக்கறிஞர் அல்முதென பர்னபியு என்பவரால் முறைப்பாடு முன்வைக்கப்படும். ஊடக சுதந்திரம் சம்பந்தமான உயர் மட்ட வழுக்குரைஞர்கள் சபையின் உறுப்பினர்களான ஷாஸ் பரொனஸ் ஹெல்னா கெனடி பிரதான உரையை ஆற்றவுள்ளார்.

‘சண்டே லீடர்’ பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 13 வருடங்கள் கடந்த நிலையிலும், இலங்கையில் எந்தவொரு சட்ட வல்லுநராலோ, நீதிமன்ற செயற்பாட்டினாலோ அந்த படுகொலையை செய்த கொலையாளிகளை வெளிக்கொணர முடியவில்லை. என்றாலும், லசந்த விக்ரமதுங்க படுகொலை சம்பந்தமாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். மாத்திரமல்ல, பிரகீத் எக்னலிகொட காணாமலாக்கப்பட்டு, பின்னர் கொலை செய்த குற்றத்தின் பேரில் கைது செய்து தடுத்து வைக்கப்பட்டிருந் 13 படை வீரர்களும் விடுதலை செய்யப்பட்டனர்.

இத்தகைய பின்னணியில் இலங்கையில் நிலவிய அநியாயக்காரர்களின் ஆட்சியில் நடந்த ஊடகவியலாளரின் கொலை சம்பந்தமாக மாத்திரம் ஹேக் மக்கள் நீதிமன்றம் கவனம் செலுத்தியுள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

லசந்தவின் படுகொலை விசாரணை நெதர்லாந்தின் ஹேக் நீதிமன்றத்தில்! | Tamil Leader | We Lead the Nation