Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தீர்வு கிடைக்காமல் கற்பிக்கமாட்டோம்! ஜோசப் ஸ்டாலின்

T

The Leader Desk

அக்டோபர் 1, 2021 • 11:21 AM

தீர்வு கிடைக்காமல் கற்பிக்கமாட்டோம்! ஜோசப் ஸ்டாலின்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
  • அதன் பின்னரே பாடசாலைகளை ஆரம்பிக்கலாம்.
  • இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாடு திறக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது.
எழுத்து அளவு:

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் எடுத்துவரும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,

நாடு திறக்கப்பட்ட பின்னர் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருக்கின்றது. என்றாலும் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பது தொடர்பில் இதுவரை எங்களுடன் கலந்துரையாடப்பவில்லை.

பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதாக இருந்தால் அதுதொடர்பில் மேற்கொள்வதற்கு பல நடவடிக்கைகள் இருக்கின்றன. பாடசாலைக்கு தேவையான சுகாதார பாதுகாப்பு, மாணவர்களுக்கான சுகாதார பாதுகாப்பு நடவடிக்கைகள் ஏற்பாடு செய்யவேண்டி இருக்கின்றன. அதன் பின்னரே பாடசாலைகளை ஆரம்பிக்கலாம்.

அத்துடன் பாடசாலைகளை திறப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர் சம்பள முரண்பாட்டுக்கு தீர்வு வழங்கப்படவேண்டும். இல்லாவிட்டால் நாடுபூராகவும் எதிர்ப்பு போராட்டங்களை மேற்கொண்டு, அதிபர், ஆசிரியர் பாேராட்டத்தை புதிய வடிவத்தில் தொடர்ந்து முன்னெடுப்போம்.

எமது இந்த போராட்டத்துக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சங்கம் மற்றும் ஏனைய தொழிற்சங்கங்களும் ஆதரவளிப்பதற்கு இணக்கம் தெரிவித்திருக்கின்றன.

அதனால் பாடசாலைகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கு முன்னர் அதிபர், ஆசிரியர்களின் பிரச்சினைக்கு தீர்வு வழங்கவேண்டும். இல்லாவிட்டால் பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டாலும் ஆசிரியர்கள் கற்பித்தல் நடவடிக்கைகளுக்காக பாடசாலைக்கு செல்லமாட்டார்கள் என்றார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...