Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பேசாலையில் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற மீனவர்களின் முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக் கொள்ளவில்லை!

T

The Leader Desk

செப்டம்பர் 30, 2021 • 5:06 PM

பேசாலையில் பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்ற மீனவர்களின் முறைப்பாட்டை பொலிஸார் ஏற்றுக் கொள்ளவில்லை!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தனது தந்தை கடல் தொழிலுக்குச் சென்றுவிட்டு செப்படம்பர் 24ம் திகதி வெள்ளிக்கிழமை சரியான நேரத்தில் வீட்டுக்கு வராமையால், இது சம்பந்தமாக விசாரிப்பதற்காக கிராம உத்தியோகத்தரான மீனவரின் மகன் கடற்கரைக்குச் சென்றுள்ளார்.
  • அதன்போது மேலும் எட்டு கடற்படையினரையும் அவ்விடத்திற்கு அழைத்து கிராம உத்தியோகத்தர் மற்றும் அங்கிருந்த மீனவர்களையும் தாக்கியுள்ளனர்.
  • அங்கு குடிபோதையில் இருந்த இரு கடற்படை வீரர்கள் தனது தந்தையை தாக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.
எழுத்து அளவு:

தனது தந்தை கடல் தொழிலுக்குச் சென்றுவிட்டு செப்படம்பர் 24ம் திகதி வெள்ளிக்கிழமை சரியான நேரத்தில் வீட்டுக்கு வராமையால், இது சம்பந்தமாக விசாரிப்பதற்காக கிராம உத்தியோகத்தரான மீனவரின் மகன் கடற்கரைக்குச் சென்றுள்ளார். அங்கு குடிபோதையில் இருந்த இரு கடற்படை வீரர்கள் தனது தந்தையை தாக்கியுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.

இது குறித்து வினவிய கிராம உத்தியோகத்தர் மற்றும் சிவில் உடையிலிருந்த கடற்படை வீரர்களுக்குமிடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ள நிலையில், பிரதேசத்திலுள்ள மேலும் சில மீனவர்கள் அவ்விடத்தில் கூடியுள்ளனர். அதன்போது மேலும் எட்டு கடற்படையினரையும் அவ்விடத்திற்கு அழைத்து கிராம உத்தியோகத்தர் மற்றும் அங்கிருந்த மீனவர்களையும் தாக்கியுள்ளனர்.

இது குறித்து தாக்கப்பட்டவர்கள் பேசாலை பொலிஸில் முறைப்பாடு செய்யச் சென்றாலும் பொலிஸார் முறைப்பாட்டை ஏற்றுக் கொள்ளவில்லையெனக் கூறுகின்றனர்.

தாக்குதலினால் காயமடைந்த இரு மீனவர்கள் பேசாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...