Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தமிழ் கைதிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

T

The Leader Desk

செப்டம்பர் 30, 2021 • 4:50 PM

தமிழ் கைதிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • கடந்த 12 ஆம் திகதி மாலை 06 மணிக்கு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தமது தலைக்கு துப்பாக்கியை நீட்டி மேற்கொண்ட மரண அச்சுறுத்தல் காரணமாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
  • மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.
  • இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.
எழுத்து அளவு:

கடந்த 12 ஆம் திகதி மாலை 06 மணிக்கு அனுராதபுரம் சிறைச்சாலைக்கு சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தமது தலைக்கு துப்பாக்கியை நீட்டி மேற்கொண்ட மரண அச்சுறுத்தல் காரணமாக தமது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக அறிவிக்குமாறு இந்த மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

அன்று மாலை 6.05 மணியளவில் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைக்கூண்டிலிருந்து தாம் உள்ளிட்ட கைதிகளை வௌியேற்றி முழந்தாழிட செய்து, தலை மீது துப்பாக்கியை வைத்து அச்சுறுத்தியதாக பூபாலசிங்கம் சூரியபாலன் உள்ளிட்ட கைதிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்டுள்ள இந்த கைதிகள் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு ஜனாதிபதியினால் தமக்கு பூரண அதிகாரம் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்து, அச்சுறுத்தல் விடுத்தமையினால் தாம் உள்ளிட்ட கைதிகளின் உயிருக்கு பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தம்மை யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு மாற்றுமாறும் தமக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளில் இருந்து தம்மை விடுவிக்குமாறும் இந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, அனுராதபுரம் சிறைச்சாலை அத்தியட்சகர், சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம், நீதியமைச்சர் மற்றும் சட்டமா அதிபர் ஆகியோர் இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மனுதாரர்கள் சார்பாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் மற்றும் சட்டத்தரணி கேசவன் சயந்தன் ஆகியோர் ஆஜராகவுள்ளனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தமிழ் கைதிகள் சார்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுத் தாக்கல்! | Tamil Leader | We Lead the Nation