Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு கட்டளையிட்ட அரசியல்வாதி ஒருவர் இருக்கிறார்! தயாசிறி

T

The Leader Desk

செப்டம்பர் 29, 2021 • 2:12 PM

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு கட்டளையிட்ட அரசியல்வாதி ஒருவர் இருக்கிறார்! தயாசிறி

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் சதித்திட்டம் இதில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
  • அதற்கு பதிலாக அந்த தாக்குதலுக்கு கட்டளையிட்ட அரசியல்வாதி யார் என்பது அவர்கள் கண்டறிய வேண்டும்.
  • ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக மைத்திரிபால சிறிசேனவை சிக்க வைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது எனக் கூறியுள்ள தயாசிறி, அதன் பின்னணியில் இருப்பது யார் என்ற தகவலை வெளியிடவில்லை.
எழுத்து அளவு:

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அதிகாரத்தில் இருந்து அப்புறப்படுத்தும் சதித்திட்டம் இதில் இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக மைத்திரிபால சிறிசேனவை சிக்க வைக்கும் வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது எனக் கூறியுள்ள தயாசிறி, அதன் பின்னணியில் இருப்பது யார் என்ற தகவலை வெளியிடவில்லை.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி மற்றும் அந்த தாக்குதலுடன் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பது குறித்து ஏன் பேசுவதில்லை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அது பற்றி பேசுவார்கள் மீது அரசியல் ரீதியான பதில் தாக்குதல் நடத்தப்படுகிறது. ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு கட்டளையிட்ட அரசியல்வாதி ஒருவர் இருப்பதாகவும் தயாசிறி ஜயசேகர தகவல் வெளியிட்டுள்ளார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் சம்பந்தமாக முன்னாள் ஜனாதிபதியை அமைச்சர்கள் திட்டுவதால், பயனில்லை. அதற்கு பதிலாக அந்த தாக்குதலுக்கு கட்டளையிட்ட அரசியல்வாதி யார் என்பது அவர்கள் கண்டறிய வேண்டும். அப்போது அதில் சம்பந்தப்பட்ட ஏனையோரை கண்டறிய முடியும்.

சஹ்ரானின் தொலைபேசியில் இருந்த மதர் போர்ட்டை எடுத்தது யார், அதனையே முதலில் தேட வேண்டும். குண்டு தாக்குதல் நடத்திய நபரின் தொலைபேசியில் அனைத்து தகவல்களும் உள்ளன.

அந்த தகவல்கள் அடங்கிய மதர் போர்ட்டை ஏதோ ஒரு நாட்டை சேர்ந்த புலனாய்வுப் பிரிவினர் வேறு நாட்டுக்கு எடுத்துச் செல்கின்றனர்.

அவ்வாறு எடுத்துச் செல்ல இலங்கையின் நீதிமன்றமும் பொலிஸாரும் இடமளித்தமை பிரச்சினைக்குரியது. மதர் போர்ட்டை எடுத்துச் சென்றவரிடம் விசாரணை நடத்தினால், ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி யார் என்பது அறிய முடியும் எனவும் தயாசிறி ஜயசேகர கூறியுள்ளதாக தெரியவருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...