Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா!

T

The Leader Desk

செப்டம்பர் 29, 2021 • 1:08 PM

ஜப்பானின் புதிய பிரதமராக புமியோ கிஷிடா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகினார்.
  • இந்நிலையில், சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் புமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார்.
  • நடந்த இந்த தேர்தலில் கோனோ என்பவரும், புமியோ கிஷிடாவும் முதல் வாக்கு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சமநிலையில் இருந்தபோதிலும் இறுதியில், கிஷிடா 257 வாக்குகளைப் பெற்றார்.
  • கோனோ 170 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.
எழுத்து அளவு:

ஜப்பான் நாட்டின் பிரதமராக இருந்துவந்த ஷின்சோ அபே, உடல்நிலையைக் காரணம் காட்டி கடந்த ஆண்டு பதவி விலகினார். இதனையடுத்து யோஷிஹிதே சுகா புதிய பிரதமராக பதவியேற்றார்.

இந்நிலையில், யோஷிஹிதே சுகா தலைமையிலான அரசு கொரோனா தொற்று பரவலைக் கையாண்ட விதம் குறித்து ஜப்பான் மக்களிடையே கடும் அதிருப்தி எழுந்தது. இதனையடுத்து யோஷிஹிதே சுகா, கட்சியின் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று அறிவித்திருந்தார். ஜப்பானில் ஆளுங்கட்சியின் தலைவராக இருப்பவரே பிரதமராக பொறுப்பேற்பார் என்பதால், ஆளுங்கட்சியான சுதந்திர ஜனநாயகக் கட்சிக்குள் அடுத்த பிரதமரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றது.

இந்நிலையில், சுதந்திர ஜனநாயக கட்சித் தலைவருக்கான தேர்தலில் புமியோ கிஷிடா வெற்றி பெற்றுள்ளார். இதனையடுத்து இவர் ஜப்பான் நாட்டின் பிரதமராக பதவியேற்க உள்ளார். நடந்த இந்த தேர்தலில் கோனோ என்பவரும், புமியோ கிஷிடாவும் முதல் வாக்கு எண்ணிக்கையில் கிட்டத்தட்ட சமநிலையில் இருந்தபோதிலும் இறுதியில், கிஷிடா 257 வாக்குகளைப் பெற்றார். கோனோ 170 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை தழுவினார்.

புமியோ கிஷிடா ஏற்கனவே 2012 - 2017இல் ஜப்பானின் வெளியுறவுத்துறை மந்திரியாக பதவி வகித்தவர். கடந்த 2020ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சித் தலைவருக்கான தேர்தலில் தற்போதைய பிரதமர் யோஷிஹிதே சுகாவிடம் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...