Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

இலங்கை,ஆர்ஜென்டீனாபோல வறுமைக்குல் அவுஸ்திரேலியாவும் சிக்குமா!

T

The Leader Desk

செப்டம்பர் 28, 2021 • 6:35 AM

இலங்கை,ஆர்ஜென்டீனாபோல வறுமைக்குல் அவுஸ்திரேலியாவும் சிக்குமா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • பெரும் செலவீனங்கள் அதிகளவு அரச கட்டுப்பாடுகள் காரணமாக ஆர்ஜென்டீனா இலங்கை போல அவுஸ்திரேலியாவும் செழிப்பான நிலையிலிருந்து வறுமைக்குள் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • ஆனால் துயரமளிக்கும் விதத்தில் இந்த தலைமுறை ஆபத்தில் உள்ளதாக எழுதியுள்ள அவர் இதனை எங்கள் மத்தியில் உள்ள இளையவர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
  • தேசத்தின் செல்வத்தை பாதுகாப்பதற்காக சோசலிசத்தின் அழிவுவேலைகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அவுஸ்திரேலிய மக்கள் தயாராகயிருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எழுத்து அளவு:

பெரும் செலவீனங்கள் அதிகளவு அரச கட்டுப்பாடுகள் காரணமாக ஆர்ஜென்டீனா இலங்கை போல அவுஸ்திரேலியாவும் செழிப்பான நிலையிலிருந்து வறுமைக்குள் தள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தேசத்தின் செல்வத்தை பாதுகாப்பதற்காக சோசலிசத்தின் அழிவுவேலைகளில் இருந்து நாட்டை பாதுகாப்பதற்கு அவுஸ்திரேலிய மக்கள் தயாராகயிருக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அவுஸ்திரேலியா நாளை என்ற நூலில் அவர் இதனை எழுதியுள்ளதாக கூறப்படும் அதேவேளை, விரைவில் வெளியாகவுள்ள அந்த நூலில் அவுஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் டொனி அபொட்டின்  (Tony Abbott) கட்டுரைகள் உட்பட வலதுசாரி தலைவர்களின் கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் தலைமுறை தலைமுறையாக நாங்கள் சிறந்த நாட்டை எங்கள் குழந்தைகளிற்கு வழங்க விரும்பினோம் என அவர் எழுதியுள்ள கட்டுரையை டெய்லிமெயில் வெளியிட்டுள்ளது.

ஆனால் துயரமளிக்கும் விதத்தில் இந்த தலைமுறை ஆபத்தில் உள்ளதாக எழுதியுள்ள அவர் இதனை எங்கள் மத்தியில் உள்ள இளையவர்கள் விரும்பவில்லை எனவும் தெரிவித்துள்ளார். எனவே அவுஸ்திரேலிய அரசாங்கம் எதிர்வரும் ஆண்டுகளில் நிதிவிடயத்தில் அதிக கட்டுப்பாட்டை பேணவேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

கவர்ச்சிகரமான அரசியல் வார்த்தைகளான இது இலவசம் அது இலவசம் போன்றவை முன்னர் தேயிலை தோட்டங்கள் பிறவிவசாயங்களால் செழிப்பாகயிருந்த இலங்கையை தனக்கான உணவை தனது நாட்டிலிருந்தே பெற்றுக்கொள்ள முடியாத நாடாக மாற்றியுள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மாறாக அதன் மக்கள் பசியை, சுதந்திரமாக பேசுவதற்கான உரிமை இழப்பை - இவற்றின் விளைவாக ஏற்பட்ட கலவரங்களை சொத்து அழிப்பை, மகிழச்சியின்மையை, பொலிஸ் மற்றும் இராணுவத்தை எதிர்கொண்டனர் எனவும் ஜினா ரைன்ஹேர்ட் அந்த நூலில் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.  

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

இலங்கை,ஆர்ஜென்டீனாபோல வறுமைக்குல் அவுஸ்திரேலியாவும் சிக்குமா! | Tamil Leader | We Lead the Nation