Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

ஜப்பானில் மரணித்த விஸ்மா சந்தமாலியின் மரணத்திற்கு நீதி வேண்டும்! சந்தமாலியின் சகோதரிகள்

T

The Leader Desk

செப்டம்பர் 27, 2021 • 4:25 PM

ஜப்பானில் மரணித்த விஸ்மா சந்தமாலியின் மரணத்திற்கு நீதி வேண்டும்! சந்தமாலியின் சகோதரிகள்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • வயதான விஸ்மா சந்தமாலிக்கு நீதி கேட்டு ஜப்பானுக்கு சென்றுள்ள அவரது சகோதரிகளான வயோமி மற்றும் பூர்ணிமா ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர்.
  • அதனை வழக்குரைஞர்களிடம் காட்டுவதற்குக் கூட அதிகாரி அனுமதியளிக்காததால், இந்த மரணம் சம்பந்தமாக ஜப்பானின் குடிவரவு குடியகல்வுத் துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை வெளிப்படுவதாகவும் விஸ்மாவின் சகோதரிகள் கூறுகின்றனர்.
  • விஸ்மாவின் மரணம் சம்பந்தமாக ஜப்பானின் நீதி அமைச்சர் யோகா கமிகாவா சந்தமாலியின் உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்த நிலையிலேயே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எழுத்து அளவு:

33 வயதான விஸ்மா சந்தமாலிக்கு நீதி கேட்டு ஜப்பானுக்கு சென்றுள்ள அவரது சகோதரிகளான வயோமி மற்றும் பூர்ணிமா ஆகியோர் சட்ட நடவடிக்கை எடுப்பதற்காக தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். விஸ்மாவின் மரணம் சம்பந்தமாக ஜப்பானின் நீதி அமைச்சர் யோகா கமிகாவா சந்தமாலியின் உறவினர்களிடம் மன்னிப்பு கேட்டிருந்த நிலையிலேயே சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

சந்தமாலி என்ற மாணவி மார்ச் மாதம் இறப்பதற்கு முன்பு, ஜப்பானின் குடிவரவு குடியகல்வு துறைக்குச் சொந்தமான தடுப்பு முகாமில் இருக்கும் போது நோய்வாயப்பட்ட நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சையளிக்க அதிகாரிகள் தவறியமையால் இந்த மரணம் நிகழ்ந்துள்ளதற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக எமக்குக் கிடைத்த தகவல்கள் வெளிப்படுத்துகின்றன.

இதற்கமைய, இலங்கையிலிருந்து கல்வி நடவடிக்கைகளுக்காக ஜப்பானுக்குச் சென்ற விஸ்மா சந்தமாலியின் விசா காலாவதியாகிய காரணத்தினால் அவர் தடுத்து வைக்கப்பட்டிருந்த போதே நோயினால் மரணித்துள்ளார்.

இது சம்பந்தமாக நீதி பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஜப்பானுக்குச் சென்ற விஸ்மாவின் சகோதரிகள் இருவருக்கும் விஸ்மா தடுத்து வைக்கப்பட்டிருந்த அறையின் பாதுகாப்பு கெமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை முழுமையாக பார்ப்பதற்கு வாய்ப்பளிக்காமல், தொகுக்கப்பட்ட ஒரு பகுதியை மாத்திரம் சந்தர்ப்பம் வழங்கியுள்ளனர்.

அதனை வழக்குரைஞர்களிடம் காட்டுவதற்குக் கூட அதிகாரி அனுமதியளிக்காததால், இந்த மரணம் சம்பந்தமாக ஜப்பானின் குடிவரவு குடியகல்வுத் துறை அதிகாரிகளின் பொறுப்பற்ற தன்மை வெளிப்படுவதாகவும் விஸ்மாவின் சகோதரிகள் கூறுகின்றனர்.

தமது சகோதரியின் மரணம் சம்பந்தமாக தமக்கும், சட்ட நடவடிக்கைகளுக்காக வழக்குரைஞர்களுக்கும் உண்மையை வெளிப்படுத்திக்கொள்வதற்காக பாதுகாப்பு கெமராக்களில் பதிவாகியுள்ள முழுவதையும் பார்ப்பதற்கு சந்தர்ப்பம் வழங்க வேண்டுமென ஜப்பான் அதிகாரிகளை இவர்கள் வற்புறுத்தி வருகின்றனர். இது விடயத்தில் இலங்கையிலுள்ள ஜப்பான் தூதுவராலயம் போதுமான ஒத்துழைப்பை வழங்கவில்லையெனத் தெரியவருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஜப்பானில் மரணித்த விஸ்மா சந்தமாலியின் மரணத்திற்கு நீதி வேண்டும்! சந்தமாலியின் சகோதரிகள் | Tamil Leader | We Lead the Nation