Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது! மன்னார் நீதிமன்றம்

T

The Leader Desk

செப்டம்பர் 25, 2021 • 3:04 PM

பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது! மன்னார் நீதிமன்றம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன்தான், குறித்த நினைவேந்தலை மேற்கொள்ள உள்ளதாக கூறியே பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.
  • இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள், தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.
  • இந்நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சிவகரனுக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பின் பேரில் , நேற்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார்.
எழுத்து அளவு:

தமிழ் தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி.எஸ் சிவகரன்தான், குறித்த நினைவேந்தலை மேற்கொள்ள உள்ளதாக கூறியே பொலிஸார் வழக்கு தாக்கல் செய்திருந்தனர்.

இந்நிலையில் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு சிவகரனுக்கு கிடைக்கப்பெற்ற அழைப்பின் பேரில் , நேற்று அவர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி இருந்தார்.

இதன்போது, சிவகரன் சார்பாக சிரேஸ்ட சட்டத்தரணி எஸ்.சிராய்வா மற்றும் சட்டத்தரணி அன்ரனி றொமோசன் ஆகியோர் நீதிமன்றில் முன்னிலையாகி இருந்தனர். இதன்போது நீதிமன்றத்தில் முன்னிலையான சட்டத்தரணிகள், தமது சமர்ப்பணத்தை முன்வைத்தனர்.

அதாவது, மன்னார் பொலிஸார் தாக்கல் செய்தது போல் மக்களை ஒன்று சேர்த்து நினைவேந்தலை நடத்த எவ்வித ஏற்பாடுகளையும் மேற்கொள்ளவில்லை எனவும், பொலிஸார் கற்பனையில் பொய்யான வழக்கை மன்றில் தாக்கல் செய்துள்ளதாகவும் சமர்ப்பணத்தை சட்டத்தரணிகள் முன்வைத்தனர்.

எனவே, பொலிஸாரின் விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான், “சிவகரன் என்பவர் எதிர்வரும் 26ஆம் திகதி நித்திலம் பதிப்பகத்தில் மக்களை ஒன்று கூட்டி எவ்வித ஒன்று கூடலையும் மேற்கொள்ளவில்லை என தெரிவித்ததுடன், , தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியம் இல்லை என்றும், குறித்த வழக்கை எதிர்வரும் 1 ஆம் திகதிக்கு ஒத்திவைப்பதாகவும் உத்தரவிட்டார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...