Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

தேசிய ரூபவாஹினி துவேசத்தையும், வெறுப்பையும் வளர்க்கக் கூடிய கருத்துக்களை ஒளிபரப்புவதாக குற்றச்சாட்டு!

T

The Leader Desk

செப்டம்பர் 25, 2021 • 2:35 PM

தேசிய ரூபவாஹினி துவேசத்தையும், வெறுப்பையும் வளர்க்கக் கூடிய கருத்துக்களை ஒளிபரப்புவதாக குற்றச்சாட்டு!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் பகிரங்கமாக விமர்சித்து வருவதுடன், ஊடக அமைச்சருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
  • செப்டம்பர் 18ம் திகதி காலை 8.30 மணிக்கு தேசிய ரூபவாஹினியில் ஒலிபரப்பப்பட்ட ஆயுபோவன் நிகழ்ச்சியில் பங்குபற்றிய கலபொடஅத்தே ஞானசார தேரர் முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக சந்தேகத்தையும் வெறுப்பையும் தோற்றுவிக்கும் வகையில் பேசியுள்ளார்.
  • முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக ஞானசார தேரர் தொடுத்த குற்றங்கள் சம்பந்தமாக நம்பத்தகுந்த சான்றுகள் இருக்குமாயின், அது குறித்து பாதுகாப்புப் பிரிவுகளுக்கு அவர் தகவலளித்திருக்க வேண்டும்.
எழுத்து அளவு:

இது சம்பந்தமாக பல்வேறு தரப்பினர் பகிரங்கமாக விமர்சித்து வருவதுடன், ஊடக அமைச்சருக்கும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

செப்டம்பர் 18ம் திகதி காலை 8.30 மணிக்கு தேசிய ரூபவாஹினியில் ஒலிபரப்பப்பட்ட ஆயுபோவன் நிகழ்ச்சியில் பங்குபற்றிய கலபொடஅத்தே ஞானசார தேரர் முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக சந்தேகத்தையும் வெறுப்பையும் தோற்றுவிக்கும் வகையில் பேசியுள்ளார்.

முஸ்லிம் மக்களை ‘நடமாடும் குண்டுதாரிகளாக’ குறிப்பிட்டுள்ளதோடு, ‘முஸ்லிம் தீவிரவாதிகள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் செயற்படக் கூடும்’ எனக் கூறி பார்வையாளர்கள் மத்தியில் சந்தேகத்தையும் வெறுப்பையும் தோற்றுவிக்கும் வகையில் கூறியுள்ளதோடு, ‘முஸ்லிம் மக்கள் ஆயுதம் ஏந்திக் கொண்டிருக்கிறார்கள்’ என கோபத்துடனும், வெறுப்புடனும் கூறியுள்ளார்.

இந்த பாரதூரமான கூற்று மற்றும் வெறுப்பூட்டும் கருத்துக்கள் சம்பந்தமாக மேற்படி நிகழ்ச்சியை நடத்திய அறிவிப்பாளர் அசேல பண்டாரநாயக ஞானசார தேரரின் கருத்துக்களுக் எவ்வித இடையூறும் செய்யவில்லை, விசேடமாக தேசிய ரூபவாஹினி கூட்டுத்தாபனம் அன்றிலிருந்து இன்று வரை இந்த நிகழ்சியினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்து அதிர்ச்சியை வெளிக்காட்டவோ, வருத்தம் தெரிவிக்வோ இல்லை.

முஸ்லிம் மக்கள் சம்பந்தமாக ஞானசார தேரர் தொடுத்த குற்றங்கள் சம்பந்தமாக நம்பத்தகுந்த சான்றுகள் இருக்குமாயின், அது குறித்து பாதுகாப்புப் பிரிவுகளுக்கு அவர் தகவலளித்திருக்க வேண்டும். தொலைக்காட்சி ஊடகத்தினால் பார்வையாளர்கள் மத்தியில் அச்சத்தையும் வெறுப்பையும் பரப்புவது கடுமையான குற்றமாகும்.

தேசிய ஒலிபரப்புக் கூட்டுதாபனம் இந்த நிகழ்ச்சியை நேரடியாக ஒலிபரப்பியதன் பின்னர், இணையத்ளங்கள் ஊடாகவும், யூ டியூப் ஊடாகவும் இந்த நிகழ்ச்சி தொகுக்கப்படாமல் பார்வையாளர்களை அச்சுறுத்தி வெறுப்பை பரப்பி வருகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...