Tamil Leader News
முக்கியம்
2027க்கான பட்ஜெட்; அட்வகாட்டா நிறுவனத்திடமிருந்து 5 பொருளாதார முன்மொழிவுகள்!●சங்கக்காரவின் விமான நிலையச் சம்பவத்திலிருந்து நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்!●நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●
செய்திகள்

புலம்பெயர் இலங்கையர்கள் நியுயோர்க் நகரில் போராட்டம்!

T

The Leader Desk

செப்டம்பர் 23, 2021 • 11:39 AM

புலம்பெயர் இலங்கையர்கள் நியுயோர்க் நகரில் போராட்டம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அதன் ஓரங்கத்தையே நியுயோர்க் நகரிலும் நேற்று கண்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
  • நீதி பெற்றுக் கொடுக்கப்படாததால் தான் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் சர்வதேசத்தில் போராட்டங்களை நடத்துகின்றனர்.
  • இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
எழுத்து அளவு:

அதன் ஓரங்கத்தையே நியுயோர்க் நகரிலும் நேற்று கண்டோம் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவிக்கையில்,

இலங்கையில் மீண்டுமொரு தீவிரவாதம் மற்றும் வன்முறைகள் இடம்பெற இடமளிக்கப்படாதென இலங்கை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தின் போது உறுதியளித்துள்ளார்.

எனினும் இந்த உறுதிமொழியை, அடை மழையினிடையே ஏற்படுகின்ற கடும் மின்னல் தாக்கங்களிலிருந்து பாதுகாப்பைப் பெற வீட்டிலிருக்கின்ற பழைய இரும்புகளை வெளியே வீசி விடுவது போன்ற சர்வதேசத்தைத் திருப்திபடுத்துகிந தற்காலிக அறிவிப்பாகவே பார்க்கின்றோம்.

உண்மையில் அவ்வாறு மீள்நிகழாமையை உறுதி செய்ய வேண்டுமாயின், இரண்டு வருடங்களுக்கு முன்னர் நடந்த உயிர்த்த ஞாயிறு தின தீவிரவாத தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்கவும், அந்தத் தாக்குதலுக்குப் பின்னால் இருக்கின்ற பிரதான சூத்திரதாரிகளைக் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் இலங்கை அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

நீதி பெற்றுக் கொடுக்கப்படாததால் தான் புலம்பெயர்ந்துள்ள இலங்கையர்கள் சர்வதேசத்தில் போராட்டங்களை நடத்துகின்றனர். அதன் ஓரங்கத்தையே நியுயோர்க் நகரிலும் நேற்று கண்டோம்.

தாமதப்படுத்தும் நீதி குறித்த பிரச்சினை ஜெனீவா மாநாட்டிலும், தற்போது ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்திலும் அவதானிக்க முடிந்தது. உள்நாட்டிலேயே தீர்வுகளை விரைந்து வழங்கினால் அவ்வாறான அழுத்தங்கள் ஏற்படாது என குறிப்பிட்டுள்ளார்.

 

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...