Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பொதுஜன பெரமுனவுக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைகிறது!

T

The Leader Desk

செப்டம்பர் 20, 2021 • 5:06 PM

பொதுஜன பெரமுனவுக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைகிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
  • ஆசிரியர்களையும், பௌத்த பிக்குகளையும் கைகால்களை பிடித்து தூக்கிச் சென்றதனால் சமூகத்தில் இந்தப் போராட்டம் தொடர்பில் அனுதாபம் ஏற்பட்டது.
  • இதன்போது மேலும் கூறுகையில், அன்று மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்து வீட்டுக்கு சென்ற போது நானே முதன் முதலாவதாக அவரை தங்காலையில் மீளவும் ஓர் மேடையில் ஏற்றினேன்.
எழுத்து அளவு:

இன்றைய தினம் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது மேலும் கூறுகையில்,

அன்று மஹிந்த ராஜபக்ச தோல்வியடைந்து வீட்டுக்கு சென்ற போது நானே முதன் முதலாவதாக அவரை தங்காலையில் மீளவும் ஓர் மேடையில் ஏற்றினேன்.

இப்போது என்னை விமர்சனம் செய்யும் அமைச்சர்கள் அப்போது இருக்கவில்லை. அவர்களுக்கு எதிரான ஊழல் மோசடி குற்றச்சாட்டுக்கள் அம்பலமாகும் என அவர்கள் வெளியே தலைகாட்டவில்லை.

நான் எந்தவொரு குற்றச் செயலையும் செய்யவில்லை, எந்தவொரு ஒழுக்காற்று விசாரணையையும் எதிர்கொள்ளத் தயார்.

சரத் வீரசேகர அமைச்சுப் பதவியில் இருந்திருக்காவிட்டால் ஆசிரியர் போராட்டங்கள் இவ்வளவு பூதாகாரமாகியிருக்காது.

ஆசிரியர்களையும், பௌத்த பிக்குகளையும் கைகால்களை பிடித்து தூக்கிச் சென்றதனால் சமூகத்தில் இந்தப் போராட்டம் தொடர்பில் அனுதாபம் ஏற்பட்டது.

போராட்டங்களில் ஈடுபடுவோர் பயங்கரவாதிகள் என அமைச்சர் கூறுகின்றார், அமைச்சர் சரத் வீரசேகர ஹிட்லரைப் போன்று செயற்பட முயற்சிக்கின்றார்.

பிரச்சினைகளை பற்றி பேசுவோருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முயற்சிக்கப்படுகின்றது.

ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமாயின் முதலில் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்திற்கு எதிராகவே எடுக்க வேண்டும்.

அமைச்சர்கள் ஒன்றிரண்டு பேரை சந்தோசப்படுத்த ஒழுக்காற்று நடவடிக்கை செய்யக் கூடாது என ஜகத் குமார தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் ஜகத் குமாரவின் இந்தக் குற்றச்சாட்டுக்கள் பொதுஜன பெரமுனவுக்குள் உட்கட்சி மோதல் உக்கிரமடைவதை எடுத்துக் காட்டுவதாக அரசயில் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...