Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

பிள்ளைகள் இலவச கல்வியை இழந்துள்ளனர்! சஜித்

T

The Leader Desk

செப்டம்பர் 19, 2021 • 4:47 PM

பிள்ளைகள் இலவச கல்வியை இழந்துள்ளனர்! சஜித்   

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் – அதிபர்கள் சம்பள முரண்பாட்டிற்கு நியாயமான தீர்வை உடனடியாக வழங்கி மாணவர்கள் கல்வியை பெற்றுக் கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.
  • துரதிர்ஷ்டவசமான கல்வித்துறை பிரச்சினைகளின் தற்போதைய மற்றும் எதிர்கால விளைவுகள் கடுமையாகவும் மிக மோசமாகவும் இருக்குமென இந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு தெரியாமலிருப்பது மற்றும் புரிந்துணர்வின்மை என்பன மிகவும் அருவருக்கத்தக்க விடயமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.
  • நாட்டை ஆட்சி செய்கின்ற அரசாங்கத்துக்கும் அதன் தலைவர்களுக்கும் கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினையிலிருந்து இலங்கையை மீட்பதற்கு நியாயமான வேலைத்திட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.
எழுத்து அளவு:

இந்த விடயம் தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவரினால் வௌியிடப்பட்டுள்ள அறிக்கையில், ஆசிரியர் – அதிபர்கள் சம்பள முரண்பாட்டிற்கு நியாயமான தீர்வை உடனடியாக வழங்கி மாணவர்கள் கல்வியை பெற்றுக் கொள்ளும் உரிமையை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தியுள்ளார்.

பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருத்தமான கொவிட் தடுப்பூசிகளை வழங்கி, மூடப்பட்டுள்ள பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை உடனடியாக திறந்து கல்வியை பெறும் உரிமை மற்றும் அவர்களின் எதிர்காலம் பாதுகாக்கப்படுவதை உறுதி செய்யுமாறும் ஆட்சியாளர்களை வலியுறுத்துவதாக எதிர்க்கட்சி தலைவரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டை ஆட்சி செய்கின்ற அரசாங்கத்துக்கும் அதன் தலைவர்களுக்கும் கல்வித்துறையில் காணப்படுகின்ற பிரச்சினையிலிருந்து இலங்கையை மீட்பதற்கு நியாயமான வேலைத்திட்டங்கள் இருப்பதாக தெரியவில்லை என அவர் கூறியுள்ளார்.

துரதிர்ஷ்டவசமான கல்வித்துறை பிரச்சினைகளின் தற்போதைய மற்றும் எதிர்கால விளைவுகள் கடுமையாகவும் மிக மோசமாகவும் இருக்குமென இந்நாட்டு ஆட்சியாளர்களுக்கு தெரியாமலிருப்பது மற்றும் புரிந்துணர்வின்மை என்பன மிகவும் அருவருக்கத்தக்க விடயமென எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

பல தசாப்தங்களாக அனுபவித்த இலவசக் கல்விச் சலுகையை நாட்டிலுள்ள வறுமையால் வாடும் பிள்ளைகள் இழந்துள்ளமை வேதனைக்குரிய விடயமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கூறியுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...