Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

தொற்றுநோய் சட்டம் தமிழ் மாவீரர்களை நினைவுகூருவதை தடை செய்கிறது!

T

The Leader Desk

செப்டம்பர் 18, 2021 • 5:28 AM

தொற்றுநோய் சட்டம் தமிழ் மாவீரர்களை நினைவுகூருவதை தடை செய்கிறது!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • செப்டம்பர் 15 ஆம் திகதி 5 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருக்கத் தொடங்கிய திலீபன் செப்டம்பர் 26 ஆம் திகதி 11 வது நாள் உயிர் நீத்தார்.
  • மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான இடத்தில் செப்டம்பர் 15 முதல் 26 வரை நடைபெறவிருந்த இந்த ஆண்டு நினைவேந்தல் காத்தான்குடி காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
  • காத்தான்குடி பொலிஸ் OIC கஜநாயக்க, இத்தகைய நினைவுகூருதல்கள் எதிரிகளின் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்றும், கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தற்போதைய சுகாதார விதிமுறைகளின்படி இத்தகைய நினைவேந்தல்கள் தடை செய்யப்பட வேண்டும் நீதிமன்றத்தை கேட்டிருந்தார்.
எழுத்து அளவு:

இந்திய இராணுவத்தின் வெளியேற்றம் உள்ளிட்ட 5 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து 34 ஆண்டுகளுக்கு முன்பு உயிரிழந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் யாழ்ப்பாண அரசியல் துறை பொருப்பாளர் கேணல் திலீபன் என்ற ராசையா பார்த்தீபனின் நினைவாக மட்டக்களப்பில் ஒரு வாரம் நினைவேந்தல் ஏற்பாடு செய்யப்பட்டது.

1987 செப்டம்பர் 15 ஆம் திகதி 5 கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருக்கத் தொடங்கிய திலீபன் செப்டம்பர்  26 ஆம் திகதி 11 வது நாள் உயிர் நீத்தார்.

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்கு சொந்தமான இடத்தில் செப்டம்பர் 15 முதல் 26 வரை நடைபெறவிருந்த இந்த ஆண்டு நினைவேந்தல் காத்தான்குடி காவல்துறையின் வேண்டுகோளுக்கு இணங்க மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றத்தால் தடைவிதிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடி பொலிஸ் OIC கஜநாயக்க, இத்தகைய நினைவுகூருதல்கள் எதிரிகளின் தாக்குதலுக்கு வழிவகுக்கும் என்றும், கொரோனா தொற்றுநோயைக் கட்டுப்படுத்த தற்போதைய சுகாதார விதிமுறைகளின்படி இத்தகைய நினைவேந்தல்கள் தடை செய்யப்பட வேண்டும் நீதிமன்றத்தை கேட்டிருந்தார்.

காத்தான்குடி OIC அவர்கள் பொலிஸ் உளவுத்துறை அத்தகைய நினைவேந்தலை நடத்தத் தயாராகி வருவதை வெளிப்படுத்தியதாக கூறினார்.

மட்டக்களப்பு மேயர் தியாகராஜா சரவணபவன், கிருஷ்ணபிள்ளை சேயோன்,பேரின்பராசா ​​ஜெனகன் மற்றும் கதிஹரன் நிசாந்தன் உள்ளிட்ட நினைவேந்தலின் அமைப்பாளர்களுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் திலீபனின் நினைவேந்தலை தடைசெய்து மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தொற்றுநோய் சட்டம் தமிழ் மாவீரர்களை நினைவுகூருவதை தடை செய்கிறது! | Tamil Leader | We Lead the Nation