Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?

T

The Leader Desk

செப்டம்பர் 17, 2021 • 2:55 PM

ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா?

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் 'பசிபிக் அளாவிய விரிவான, முற்போக்கான கூட்டாண்மை ஒப்பந்தம்' அமெரிக்காவால் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.
  • ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2017ல் வெளியேறியது அமெரிக்கா.
  • அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதற்கான முடிவை எடுத்தார்.
எழுத்து அளவு:

Comprehensive and Progressive Agreement for Trans-Pacific Partnership (CPTPP) என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்படும் 'பசிபிக் அளாவிய விரிவான, முற்போக்கான கூட்டாண்மை ஒப்பந்தம்' அமெரிக்காவால் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கத்தோடு உருவாக்கப்பட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தத்தில் இருந்து 2017ல் வெளியேறியது அமெரிக்கா. அப்போதைய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் இதற்கான முடிவை எடுத்தார்.

இந்த தாராள வணிக ஒப்பந்தத்தில் சேர்வதற்கு உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரம் விண்ணப்பித்துள்ளது என்று சீன வணிகத்துறை அமைச்சர் வாங் வென்டாவ் தெரிவித்தார். இதற்கான கடிதம் நியூசிலாந்து வணிக அமைச்சர் டேமியன் ஓ கொன்னோருக்கு அனுப்பப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஒப்பந்தத்துக்கான நிர்வாக மையமாக நியூசிலாந்து செயல்படுகிறது.

விண்ணப்பம் அனுப்பப்பட்டதை அடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி விவாதிப்பதற்காக சீன அமைச்சர் வாங் - ஓ கொன்னோர் இருவரும் தொலைபேசி வழியில் உரையாடினர் என்று சீன வணிக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முதல் முதலில் 'பசிபிக் அளாவிய கூட்டாண்மை' என்ற பெயரில் இந்த ஒப்பந்தம் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவினால் முன்னெடுக்கப்பட்டது. ஆசியா பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கை மட்டுப்படுத்தும் நோக்கோடு இந்த ஒப்பந்தம் முன்னெடுக்கப்பட்டது.

சீன பொருளாதாரம்

சீன பொருளாதாரம்

அமெரிக்கா இதில் இருந்து வெளியேறுவது என்று டிரம்ப் நிர்வாகம் முடிவு செய்த பிறகு, ஜப்பான் தலைமையில் பேச்சுவார்த்தை நடத்தி, இதன் பெயர் விரிவான, முற்போக்கான பசிபிக் அளாவிய கூட்டாண்மை ஒப்பந்தம் என்று மாற்றப்பட்டது. 2018ல் இந்த ஒப்பந்தத்தில் ஆஸ்திரேலியா, கனடா, சிலி, ஜப்பான், நியூசிலாந்து உள்பட 11 நாடுகள் கையெழுத்திட்டிருந்தன.

வட்டார வணிக ஒப்பந்தம்

இந்த CPTPP ஒப்பந்தத்தில் சேர்வதற்கு கடந்த ஜூன் மாதம் முறைப்படி பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது பிரிட்டன். தாய்லாந்து தங்களுக்கும் ஆர்வம் இருப்பதாக சமிக்ஞை தந்தது.

14 நாடுகள் இடம் பெற்றுள்ள Regional Comprehensive Economic Partnership (RCEP) என்று ஆங்கிலத்தில் அறியப்படும் வட்டார அளவிலான விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தில் கடந்த நவம்பர் மாதம் சேர்ந்த சீனாவுக்கு, இப்போது சிபிடிபிபி ஒப்பந்தத்தில் சேர்வது மிகப்பெரிய ஆதாயமாக இருக்கும்.

ஆர்.சி.இ.பி. ஒப்பந்தம் உலகின் மிகப்பெரிய பொருளாதாரக் கூட்டணி. இதில் தென் கொரியா, சீனா, ஜப்பான், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்கா, பிரிட்டன் மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான ஆக்கஸ் ஒப்பந்தம் குறித்த தகவல் வெளியான அடுத்த நாள் சீனா சிபிடிபிபி ஒப்பந்தத்தில் சேர்வதற்கு விண்ணப்பித்துள்ளது.

சீன பொருளாதாரம்

ஆஸ்திரேலியா அணுசக்தி நீர்மூழ்கிக் கப்பலை கட்டுவதற்கு அமெரிக்காவும், பிரிட்டனும் தொழில்நுட்பத்தை பகிர்ந்துகொள்ள ஆக்கஸ் ஒப்பந்தம் வழிவகை செய்கிறது. அது மட்டுமில்லாமல், செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் தொடர்பான ஷரத்துகளும் இந்த ஆக்கஸ் ஒப்பந்தத்தில் வருகின்றன. பல பதிற்றாண்டுகளில் ஆஸ்திரேலியா எட்டிய மிகப்பெரிய பாதுகாப்புத்துறை ஒப்பந்தம் இது என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

ஆக்கஸ் ஒப்பந்தம் பொறுப்பற்றது, குறுகிய மனப்பான்மை கொண்டது என்று சீனா விமர்சித்துள்ளது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

ஆசியா - பசிபிக் வணிக ஒப்பந்தத்தில் சேர சீனா விண்ணப்பம்: ஆக்கஸ் எதிரொலியா? | Tamil Leader | We Lead the Nation