Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதா!

T

The Leader Desk

செப்டம்பர் 16, 2021 • 5:35 AM

சிறைச்சாலைகள் ஆணையாளருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படாதா!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
  • இந்நிலையில், லொஹான் ரத்வத்தேயின் இராஜினாமா, துஷார உபுல்தெனிய மற்றும் சந்தன ஏக்கநாயக்க ஆகியோர் இந்த சம்பவத்தை மூடிமறைக்க வேண்டுமென்றே ஊடகங்களுக்கு பொய் சொன்னதை தெளிவுபடுத்தியுள்ளது.
  • கடந்த 12ம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை அவருக்கு முன் மண்டியிட்ட செய்துள்ளார்.
எழுத்து அளவு:

இது குறித்து கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

“இந்தச் சம்பவம் குறித்து சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய மற்றும் சிறைச்சாலை அமைச்சின் ஊடகப் பேச்சாளர் சந்தன ஏக்கநாயக்கவிடம் ஊடகங்கள் கேள்வி எழுப்பியிருந்தன.

எனினும், அவ்வாறான சம்பவம் எதுவும் பதிவாகவில்லை என்றே அவர்கள் கூறியிருந்தனர். இந்நிலையில், லொஹான் ரத்வத்தேயின் இராஜினாமா, துஷார உபுல்தெனிய மற்றும் சந்தன ஏக்கநாயக்க ஆகியோர் இந்த சம்பவத்தை மூடிமறைக்க வேண்டுமென்றே ஊடகங்களுக்கு பொய் சொன்னதை தெளிவுபடுத்தியுள்ளது.

கடந்த 12ம் திகதி அநுராதபுரம் சிறைச்சாலைக்குச் சென்ற இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்தே, தமிழ் அரசியல் கைதிகளை வரவழைத்து, அவர்களில் இருவரை அவருக்கு முன் மண்டியிட்ட செய்துள்ளார்.

அத்துடன், அவர்கள் மீது துப்பாக்கியைக் காட்டி அந்த இடத்திலேயே கொலைசெய்து விடுவேன் என அச்சுறுத்தியுள்ளார். இந்த சம்பவம் ஊடகங்களில் வெளியான பிறகு, பிரதமர் மஹிந்த ராஜபக்ச லொஹான் ரத்வத்தேவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அமைச்சு பதவியை இராஜினாமா செய்யுமாறு கோரியிருந்தார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...