Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

T

The Leader Desk

செப்டம்பர் 16, 2021 • 3:26 AM

புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை! கஜேந்திரகுமார் பொன்னம்பலம்

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பது சுமந்திரனின் கருத்து.
  • நேற்று (15) அவர் நடத்திய மெய்நிகர் ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.
  • கட்த வரவுசெலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான விவாதத்தில் நான் உரையாற்றிய போது, அரசாங்கத்தின் குற்றங்களை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்த போது, பின்னாலிருந்த சுரேன் ராகவன் “நீங்கள் ஒரு தரப்பை மாத்திரமே சொல்லுகிறீர்கள்.
எழுத்து அளவு:

புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபட்டார்கள் என்பது சுமந்திரனின் கருத்து. எங்களையும் அதற்குள் இழுத்து தான் தப்பிக்க முயற்சிக்கிறார். அது அவரது குணம். பிறந்ததிலிருந்து அபரிடமுள்ள ஒரு குணம் அதிலிருந்து அவரை மீட்க முடியாது. எம் தொடர்பாக அவர் கூறுபவற்றைபெரிதுபடுத்த வேண்டியதில்லை என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நேற்று (15) அவர் நடத்திய மெய்நிகர் ஊடக சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஒரு முழுமையான விசாரணை நடத்தினால் அதற்கு முகங்கொடுத்து அந்த இயக்கத்தின் நற்பெயரையும் தமிழ் இனத்தின் நற்பெயரை உறுதிப்படுத்தலாம் என்பதையுமே தொடர்ச்சியாக உறுதிப்படுத்தி வருகின்றோம்.

விக்கிலீக்ஸ் தகவல்களின்படி, போர் முடிவதற்கு பல மாதங்களின் முன்னரே அமெரிக்க தூதரை சந்தித்த பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய, புலிகளிற்குள் ஊடுருவி விட்டதாகவும், இந்த இடத்திலிருந்து புலிகள் தப்பிப்பது கடினம் என்றும் சொல்லியுள்ளார்.

யுத்தம் முடிந்த பின்னர் நாம் தெளிவாக ஒரு விடயத்தை குறிப்பிட்டுள்ளோம். புலிகளை பலவீனப்படுத்த ஊடுருவியர்களே, புலிகளின் பெயரில் அந்த குற்றங்களை செய்திருக்க வாய்ப்பிருந்ததாக தெரிவித்திருந்தோம். உண்மையான தமிழீழ விடுதலைப் புலிகள் எந்தவொரு போர்க்குற்றத்திலும் ஈடுபடவில்லை, உண்மையான விசாரணையொன்று நடத்தினால் விடுதலைப் புலிகளினதையும், தமிழ் இனத்தினதையும் நற்பெயரை உறுதி செய்யலாமென்பதையே குறிப்பிட்டு வருகிறோம்.

கட்த வரவுசெலவு திட்டத்தின் பாதுகாப்பு அமைச்சு தொடர்பான விவாதத்தில் நான் உரையாற்றிய போது, அரசாங்கத்தின் குற்றங்களை சுட்டிக்காட்டிக் கொண்டிருந்த போது, பின்னாலிருந்த சுரேன் ராகவன் “நீங்கள் ஒரு தரப்பை மாத்திரமே சொல்லுகிறீர்கள். இரண்டு தரப்பையும் விசாரிக்க வேண்டும். நீங்கள் தயாரா““ என பின்னாலிருந்து கத்தினார்.

அப்பொழுது சொன்னேன், நாங்கள் அந்த விசாரணைக்கு பயப்பிடவில்லை. உண்மையான விசாரணை நடத்தால் தமிழர்கள் தரப்பில் ஒரு பிழையும் நடக்கவில்லையென்பதை நாம் உறுதிப்படுத்தலாம், உண்மை தெரிய வந்தால் அதன் பின்னணிகள் தெரிய வந்தால்- சிறிலங்காவின் ஊடுருவலை உறுதிப்படுத்தலாம்.

அதைவிட, விடுதலைப் புலிகள் என சொன்னவர்களை எந்த விசாரணையுமில்லாமல் நீங்கள் கொலை செய்து விட்டீர்களே. பிறகென்ன விசாரணை? இன்று விசாரிக்கப்பட வேண்டியவர்கள் கருணா, பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய கூட்டமைப்பிலுள்ள புளொட் அமைப்புத்தான் விசாரிக்கப்பட வேண்டும். அவர்களிற்கு எதிராக இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

விடுதலைப் புலிகள் பிழை விட்டார்கள், அவர்கள் விசாரிக்கப்பட வேண்டுமென்ற நோக்கத்துடன் நாம் குறிப்பிடவில்லை. புலிகள் எந்த குற்றமும் நிரூபிக்கப்படவில்லையென்பதை நிரூபிக்கலாமென சவால் விட்டே அதனை நாம் குறிப்பிட்டோம்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

புலிகள் போர்க்குற்றத்தில் ஈடுபடவில்லை! கஜேந்திரகுமார் பொன்னம்பலம் | Tamil Leader | We Lead the Nation