Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

புலம் பெயர் அமைப்புக்கள் தங்களின் தேவைக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்! வாசுதேவ

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2021 • 5:46 AM

புலம் பெயர் அமைப்புக்கள் தங்களின் தேவைக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்! வாசுதேவ    

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அத்துடன், இராணுவத்தினர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.
  • இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தொடர்பில் விவாதம் ஒவ்வொரு முறையும் இடம்பெறுகிறது.
  • இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித பேரவை ஒருதலைப்பட்சமாக செயற்படுகின்றமை பல விடயங்கள் ஊடாக வெளிப்பட்டுள்ளன.
எழுத்து அளவு:

அத்துடன், இராணுவத்தினர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை எனவும் ஆதங்கம் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையில் சோடிக்கப்பட்ட குற்றச்சாட்டுக்களை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தொடர்பில் விவாதம் ஒவ்வொரு முறையும் இடம்பெறுகிறது.

இலங்கை விவகாரத்தில் ஐக்கிய நாடுகள் மனித பேரவை ஒருதலைப்பட்சமாக செயற்படுகின்றமை பல விடயங்கள் ஊடாக வெளிப்பட்டுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் தீர்மானங்கள் நடுநிலையானதாக காணப்பட வேண்டும்.

ஆனால் தற்போது மனித உரிமை பேரவை தனது பொதுக் கொள்கைக்கு அப்பாற்பட்டு செயற்படுகிறது. 30 வருட கால யுத்தம் ஒரு இனத்திற்கு மாத்திரம் பாதிப்பை ஏற்படுத்தவில்லை.

இலங்கை மக்கள் அனைவருக்கும் பல்வேறு வழிமுறையில் பாதிப்பை ஏற்படுத்தியது. விடுதலைப் புலிகள் அமைப்பினை பெரும்பாலான தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

விடுதலைப் புலிகள் அமைப்பினரால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உண்டு. இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல் குற்றங்கள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டுபவர்கள் இலங்கையில் வாழ்பவர்கள் அல்ல.

புலம் பெயர் அமைப்புக்கள் தங்களின் சுய தேவைக்காக ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை சாதகமாக பயன்படுத்திக் கொள்கிறார்கள்.

யுத்தத்தின் பின்னர் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்ட துரிதகர அபிவிருத்தி குறித்து இவர்கள் கருத்துரைப்பதில்லை.

இராணுவத்தினர் தொடர்பில் அதிக கவனம் செலுத்தும் ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையின் ஆணையாளர் விடுதலைப் புலிகள் அமைப்பினரால் முன்னெடுக்கப்பட்ட மனித உரிமை மீறல் குற்றங்கள் குறித்து கவனம் செலுத்தவில்லை.

யுத்தம் நிறைவுப் பெற்றதன் பின்னர் சுதந்திரம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஒரு தரப்பினரால் இடம்பெற்ற குற்றங்களை அரசாங்கத்தின் சர்வாதிகார போக்கு என கருத முடியாது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...