Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

ராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குச் சென்று அடாவடித்தனமாக நடந்து கொண்டுள்ளார்!

T

The Leader Desk

செப்டம்பர் 15, 2021 • 4:37 AM

ராஜாங்க அமைச்சர் சிறைச்சாலைக்குச் சென்று அடாவடித்தனமாக நடந்து கொண்டுள்ளார்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • அரசாங்கத்தின் அமைச்சரொருவர் ஹெலிகொப்டரில் அனுராதபுரத்திற்கு சென்று அனுராதபுரம் சிறைச்சாலையில் சண்டித்தனமா நடந்துக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவும் கூறியுள்ளார்.
  • அங்கு LTTE சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுக்குச் சென்ற அவர், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 சந்தேக நபர்களில் இருவரை வெளியில் எடுத்து மண்டியிடச் செய்து அவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.
  • மாத்திரமல்ல, ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12ம் திகதி மாலையில் தனது நண்பர்கள் சிலருடன் வெலிக்கட சிறைச்சாலைக்குள் நுழைந்து தூக்குமரம் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்றுள்ளார்.
எழுத்து அளவு:

அரசாங்கத்தின் அமைச்சரொருவர் ஹெலிகொப்டரில் அனுராதபுரத்திற்கு சென்று அனுராதபுரம் சிறைச்சாலையில் சண்டித்தனமா நடந்துக்கொண்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டாரவும் கூறியுள்ளார்.

அங்கு LTTE சந்தேக நபர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ள வார்டுக்குச் சென்ற அவர், அங்கு தடுத்து வைக்கப்பட்டுள்ள 8 சந்தேக நபர்களில் இருவரை வெளியில் எடுத்து மண்டியிடச் செய்து அவர்களின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

மாத்திரமல்ல, ராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த கடந்த 12ம் திகதி மாலையில் தனது நண்பர்கள் சிலருடன் வெலிக்கட சிறைச்சாலைக்குள் நுழைந்து தூக்குமரம் இருக்கும் இடத்திற்கு அருகில் சென்றுள்ளார். அதன் போது இவர் குடிபோதையில் இருந்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

இந்த சம்பவம் தொடர்பில் சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் சந்தன ஏகநாயக்கவிடம் விசாரித்த போது இந்த சம்பவம் தொடர்பில் தனக்கு எதுவும் தெரியாதெனக் கூறியுள்ளார். சிறைச்சாலைகள் ஆணையாளர் ஜெனரல் துசார உபுல்தெனிய இது சம்பந்தமாக கூறுகையில், விடயத்திற்குப் பொறுப்பான ராஜாங்க அமைச்சர் தனது அலுவலர்களுடன் வெலிக்கட சிறைச்சாலைக்கு வந்து கைதிகளுடன் அவர்களுக்கு மன்னிப்பு வழங்குவது குறித்து பேசியதாகவும், சிறைச்சாலைகளுக்குப் பொறுப்பான அமைச்சர் என்ற வகையில் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் சிறைக் கைதிகளை சந்தித்து பேசுவதற்கு தடை கிடையாதெனவும் கூறினார்.

.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...