Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

இலங்கையில் தவறான பாதையில் செல்லும் மனித உரிமைகள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2021 • 5:15 PM

இலங்கையில் தவறான பாதையில் செல்லும் மனித உரிமைகள் தொடர்பாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • இலங்கை நேரப்படி மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே இலங்கை உட்பட சில நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில், மனித உரிமை ஆணையாளர் மிசெல் பசலே அவர்களால் வாய்மூல அறிக்கையொன்று சமர்ப்பிக்கவிருக்கிறது.
  • வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளின் முன்னேற்றம் சம்பந்மான முன்மொழிவுகள் சம்பந்தமாக இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து கவுன்ஸிலின் 47 உறுப்பினர் நாடுகள் அறிக்கை சமர்ப்பிக்;கவுள்ளன.
  • இதன்பின்னர், இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆணையரால் முன்வைக்கப்படும் அறிக்கை மீதான விவாதம் நாளை 14ம் திகதி நடைபெறவுள்ளது.
  • பின்னர் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஐ.நா.
எழுத்து அளவு:

இலங்கை நேரப்படி மாலை 2.00 மணிக்கு ஆரம்பமாகும் இந்தக் கூட்டத் தொடரின் ஆரம்பத்திலேயே இலங்கை உட்பட சில நாடுகளில் மனித உரிமைகள் தொடர்பில் ஐக்கிய நாடுகள் மன்றத்தில், மனித உரிமை ஆணையாளர் மிசெல் பசலே அவர்களால் வாய்மூல அறிக்கையொன்று சமர்ப்பிக்கவிருக்கிறது.

46வது கூட்டத் தொடரில் இலங்கைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட இலங்கையில் நல்லிணக்கம், மனித உரிமைகளின் முன்னேற்றம் சம்பந்மான முன்மொழிவுகள் சம்பந்தமாக இலங்கை பெற்றுள்ள முன்னேற்றம் குறித்து கவுன்ஸிலின் 47 உறுப்பினர் நாடுகள் அறிக்கை சமர்ப்பிக்;கவுள்ளன.

இதன்பின்னர், இலங்கை மனித உரிமைகள் சம்பந்தமான ஐக்கிய நாடுகள் மன்றத்தின் ஆணையரால் முன்வைக்கப்படும் அறிக்கை மீதான விவாதம் நாளை 14ம் திகதி நடைபெறவுள்ளது. அதன்போது, பேரவையின் உறுப்பினர் நாடுகளின் நிரந்த உறுப்பினர்கள், சர்வதேச மனித உரிமைகள் அமைப்பு, ஹியுமன் ரைட வொச் ஆகிய சர்வதேச சிவில் அமைப்புகள் கருத்து தெரிவிக்கவுள்ளன. பின்னர் இலங்கை அரசாங்கத்தின் சார்பில் ஐ.நா. மன்றத்தின் இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதியயும், இலங்கை அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டவருமான சி.ஏ சந்திரபிரேம விளக்கமளிக்கவுள்ளார்.

இலங்கையைத் தவிர, ஆப்கானிஸ்தான், நிகரகுவா, எதியோப்பியாவின் டைக்ரே பிராந்தியம், மியன்மார் மற்றும் யேமன் ஆகிய நாடுகளில் மனித உரிமைகளின் நிலைமை சம்பந்தமாக ஆணையாளரின் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவிருக்கிறது.

இந்த மனித உரிமைகள் பேரவை கூட்டத்திற்கு சமமாக விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள ஹியுமன் வொச் அமைப்பு, ஐக்கிய நாடுகள் மன்றத்தின் மனித உரிமைகள் பேரவையானது, இலங்கையில் தவறான பாதையில் செல்லும் மனித உரிமைகள் நிலைமை சம்பந்தமாக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமெனக் கூறுகிறது.

இலங்கை அரசாங்கம் தொடர்ந்தும் மேற்கொண்டு வரும் சுயாதீன அரச நிறுவனங்களை பலவீனமாக்கும் நடவடிக்கைகள், சிவில் நிர்வாகத்தின் சீரழிவு, சட்டத்தின் ஆதிக்கத்திற்கு ஏற்படுத்தும் தடைகள் சம்பந்தமாக ஆராய்ந்த இந்த அமைப்பு, சர்வதேச மனித உரிமைகளை சரியாக நிறைவேற்றுவதற்காக இலங்கை அரசாங்கத்திற்கு அழுத்தும் கொடுக்கும் விதமாக மனித உரிமைகள் பேரவை நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் கூறுகிறது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...