Tamil Leader News
முக்கியம்
நான்கு மாவட்டங்களுக்கான நிலச்சரிவு எச்சரிக்கையை நீடித்தது NBRO!●'அவரைக் கொல்ல முயல்கிறார்கள்': இம்ரான் கானின் உயிருக்கு ஆபத்து என அவரது மகன் அவசர எச்சரிக்கை!●தமிழகத்தில் அடையாள அட்டைக்காகப் போராடும் இலங்கை இளைஞர்!●உலகின் மிகப்பெரிய கிரிப்டோகரன்சி கொள்ளையின் முழுமையான பின்னணி!●17ஆம் திகதி நாட்டை இருளில் மூழ்கடித்த திடீர் மின் தடையின் அறிக்கை வெளியானது!●இன்று நள்ளிரவு முதல் பாண் மற்றும் பேக்கரி உற்பத்திகளின் விலைகள் 5 ரூபாவால் அதிகரிப்பு!●அமெரிக்கப் பாதுகாப்பு அதிகாரிகளின் 40,000 பேரின் தகவல்கள் இணையத்தில்: உளவுப் பிரிவினர் ஆபத்தில்!●65 இலட்சம் ஓட்டுநர் உரிமங்கள் தேக்கம்: நிலைமை சீரடைய 2027 ஏப்ரல் வரை தாமதம்!●இஸ்ரேலிய வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பு அரசாங்கத்தின் நேரடித் தலையீட்டிற்கு மாத்திரமே கட்டுப்படுத்தப்படும்!●மாடு அறுத்த குற்றத்துக்காக குஜராத்தில் மூவருக்கு ஆயுள் தண்டனை!●
செய்திகள்

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய பாகிஸ்தான் விமானம்!

T

The Leader Desk

செப்டம்பர் 13, 2021 • 5:01 PM

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய பாகிஸ்தான் விமானம்!

கட்டுரையைக் கேளுங்கள்

தெளிவான தமிழ் குரல் வாசிப்பான்

  • ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது.
  • இந்த நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலுக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.
  • எனினும்,வெறும் 10 பயணிகள் மட்டுமே அதில் இருந்தனர். பயணிகளை விட விமான பணியாளர்கள் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.
  • ஆனால், எத்தனை விமானங்கள் இரு நாட்டு தலைநகரங்களுக்கும் இடையேயும் இயக்கப்படும் என்பதை இப்போதே கூற முடியாது” என்றார். முன்னதாக கடந்த 4-ந் தேதி ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எழுத்து அளவு:

ஆப்கானிஸ்தானை தலீபான்கள் கைப்பற்றியதும் அங்கிருந்து தப்பிச்செல்வதற்காக ஒரே நேரத்தில் லட்சக் கணக்கான ஆப்கான் மக்கள் காபூல் விமான நிலையத்தில் குவிந்தததால் அங்கு பெரும் பதற்றம் நிலவியது. இதைத் தொடர்ந்து உலக நாடுகள் பலவும் ஆப்கானிஸ்தான் உடனான நேரடி விமான போக்குவரத்தை உடனடியாக நிறுத்தின.

தலீபான்கள் உடனான அரசியல் சிக்கல்கள் காரணமாக உலக நாடுகள் ஆப்கானிஸ்தானுக்கான விமான போக்குவரத்தை தொடர்ந்து நிறுத்தி வைத்துள்ளன. இந்த நிலையில் பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் இருந்து ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூலுக்கு இன்று முதல் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது. எனினும்,வெறும் 10 பயணிகள் மட்டுமே அதில் இருந்தனர்.  பயணிகளை விட விமான பணியாளர்கள் எண்ணிக்கையே அதிகமாக இருந்தது.

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானுக்கு முதல் வர்த்தக விமான சேவை தொடங்கப்பட்டது குறித்து பாகிஸ்தான் ஏர்லைன்ஸ் செய்தி தொடர்பாளர் கூறுகையில், “ வார இறுதியில் வழக்கமான வர்த்தக விமான சேவைகளை தொடங்க  நாங்கள் ஆர்வமாக உள்ளோம். ஆனால், எத்தனை விமானங்கள் இரு நாட்டு தலைநகரங்களுக்கும் இடையேயும் இயக்கப்படும் என்பதை இப்போதே கூற முடியாது” என்றார்.  முன்னதாக கடந்த 4-ந் தேதி ஆப்கானிஸ்தானில் உள்நாட்டு விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தமிழ் லீடர் • WhatsApp அதிகாரப்பூர்வ சேவை

எமது அதிகாரப்பூர்வ WhatsApp குழுவில் இணையுங்கள்

சமீபத்திய மற்றும் முக்கிய செய்திகள், விசேட விசாரணை அறிக்கைகளை உங்கள் தொலைபேசிக்கு உடனே பெற தமிழ் லீடர் WhatsApp குழுவில் இன்றே இணையுங்கள்.

Tamil Leader • எங்களைப் பற்றி

Tamilleader.lk என்பது இலங்கையிலும் சர்வதேச புலம்பெயர் சமூகத்தினரிடையேயும் இயங்கும் செய்திகள் மற்றும் சமகால அம்சங்களை வழங்கும் முன்னணி செய்தி இணையத்தளமாகும். சமீபத்திய மற்றும் சமகால செய்திகள் மற்றும் அரசியல் தகவல்களை வாசகர்களுக்கு தினமும் வழங்குகிறது.

மேலும் வாசிக்க (Read More)→

கலந்துரையாடல் (0)

உரையாடலில் இணையுங்கள்

கருத்து தெரிவிக்கவும் பகுப்பாய்வுகளில் கலந்துகொள்ளவும் வாசகராகப் பதிவுசெய்க.

கலந்துரையாடல் ஏற்றப்படுகிறது...

தலீபான்கள் ஆட்சியில் ஆப்கானிஸ்தானில் தரையிறங்கிய பாகிஸ்தான் விமானம்! | Tamil Leader | We Lead the Nation